தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் துணிவு படம் வெளியான பிறகு கடந்த 2023ம் ஆண்டு வெளியான பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்த படங்களின் அப்டேட் கடந்த சில மாதங்களாகவே வெளிவராமலே இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக அவரது படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.


அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ:


நீண்ட நாட்களாகவே படப்பிடிப்பில் இருந்து வந்த விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் குட் பேட் அக்லி படத்தின் ஸ்டில்ஸ் மற்றும் அஜித்தின் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.


இந்த சூழலில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் நிறைவு பெற்றுள்ளது. இதை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பகிர்ந்துள்ள அஜித்தின் புகைப்படமும், வீடியோவும்தான் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அழகே அஜித்தே:


கடந்த சில ஆண்டுகளாகவே உடல் பருமனாக காட்சி தந்த அஜித்குமார், இந்த படத்திற்காகவும், கார் ரேஸிற்காகவும் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது புகைப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் பிரசன்னா அஜித்தின் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அழகே அஜித்தே அப்டி வச்சுக்கலாமா? என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டு வந்தனர். பிரபலங்கள் மத்தியிலும், பொது வெளியிலும் இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், கடவுளே அஜித்தே என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று அஜித்குமார் வேண்டுகோள் விடுத்தார்.


இந்த சூழலில், நடிகர் பிரசன்னா அழகே அஜித்தே அப்டி வச்சுக்கலாமா? என்று பதிவிட்டுள்ளார். 1998ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தின் லுக்கில் அஜித் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நடிகர் பிரசன்னா, சுனில், யோகிபாபு, த்ரிஷா ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.


இந்த படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.