மோகன்லால்
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக கருதப்படுபவர் நடிகர் மோகன்லால். தனது 18 வயதில் நடிக்கத் தொடங்கிய மோகன்லால் 50 ஆண்டுகாலமாக திரையுலகில் இருந்து வருகிறார். தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் என 355 படங்களுக்கும் மேலாக நடித்து தற்போதும் நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால் மணிரத்னம் இயக்கிய இருவர் , விஜய் நடித்த ஜில்லா , காப்பான் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் குறைவான படங்களே நடித்திருந்தாலும் மோகன்லால் படங்களுக்கும் அவரது நடிப்பிற்கும் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் மதிப்பு இருந்து வருகிறது.
மோகன்லான் நடிப்பு பற்றி பிரகாஷ் ராஜ்
தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் மோகன்லால் அறிமுகமானார். எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையைத் தழுவி உருவான இருவர் படத்தில் மோகன்லான் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவரது நடிப்பு ஆனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் அவருடன் இனைந்து நடித்த பிரகாஷ் ராஜ் மோகன்லால் நடிப்பு பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
"நான் மோகன்லால் படங்களை பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்குள் அவரால் மிக எளிமையாக செல்ல முடியும். அவர் நடிப்பைப் பற்றி எல்லாம் அதிகம் பேசமாட்டார். அவர் நேர்மையாக இருக்கிறார். ஒரு சிறந்த உதாரணமாக நான் அவருடன் நடித்த முதல் ஷாட்டில் நடித்தபோது நடந்த நிகழ்வை சொல்லலாம். அந்த ஒரு ஷாட்டிற்கு மட்டும் நான் 24 முறை பயிற்சி செய்தேன். 24 முறையும் அவர் பொறுமையாக என்னுடன் நடித்தார். நான் ஒரு புது நடிகன் என்று அவருக்கு தெரியும். மோகன்லாலுக்கு தன்மேல் எந்த சந்தேகமும் கிடையாது . தன் முன் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி அவருக்கு கவலையே இல்லை. அந்த மாதிரியான ஒரு நடிகர் உங்கள் முன்னாள் நடிக்கும்போது உங்களுடைய நடிப்பும் சிறப்பாக இருக்கும். " என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்