தன் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் காதலர் தினத்தன்று இளம் பெண் மீது ஆசிட் வீசய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குர்ரன்கொண்டாவில் பெரம்பள்ளி கிராமத்தில் இந்த ஆசிட் வீச்சு சம்பவம் குற்றம் நடந்துள்ளது, இதில் பாதிக்கப்பட்ட பெண் கௌதமி பலத்த காயமடைந்தார். மதனப்பள்ளியில் உள்ள அம்மாசெருவு மிட்டாவைச் சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர், சிறிது காலமாக கௌதமியைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதனப்பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, கதிரி சாலையில் அழகு நிலையம் நடத்தி வரும் கௌதமி, ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த தனது திருமணத்திற்கு தயாராகி வந்தார். பீலேருவில் உள்ள ஜெகன் காலனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பிப்ரவரி 7 ஆம் தேதி அவரது குடும்பத்தினர் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் கௌதமி மீது ஒரு தலை காதல் கொண்ட கணேஷ், தனது காதலை கெளதமி நிராகரித்ததால், ஆத்திரத்தில் இந்த ஆசிட் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மனைவி வேறு ஒருவரை காதலித்தால் தகாத உறவு கிடையாது: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்று காலை(14.02.25) கௌதமியின் பெற்றோர் பால் வாங்க வெளியே சென்றிருந்தபோது, கணேஷ் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த நேரத்தில், அவர் கெளதமியின் வீட்டிற்குள் நுழைந்து, கத்தியால் தாக்கி, பின்னர் அவரது முகத்தில் ஆசிட் வீசினார். இதனால் பலத்த தீக்காயங்களும் காயங்களும் ஏற்பட்டன. கௌதமியை அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர். அவரை உடனடியாக மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, பயாரம்பள்ளி கிராமத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசு அனைத்து வழிகளிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.