Biriyani: உணவுகளில் அனைவரும் விரும்புவது பிரியாணி. வீட்டில் விசேஷங்கள் நடந்தாலும், திருமணம் என்றாலும், ஊர் திருவிழா என்றாலும் கிடா வெட்டி பிரியாணி போடுவது வழக்கமாகவே மாறிவிட்டது. பிரியாணி பிரியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிடித்த பிரியாணியை சாப்பிடுவதற்காக பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்பவர்களும் உண்டு.

 

திரைப்பிரபலங்கள் சிலருக்கு பிடித்த உணவு என்றால் பிரியாணி தான் என்று அவர்களே பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் அண்மையில் ஊடகம் ஒன்றில், பிரகாஷ் ராஜூடன் ஓர் பயணம் என்ற வீடியோ பகிரப்பட்டிருந்தது. அப்போது தனக்கு பிடித்த உணவு குறித்து பிரகாஷ் ராஜ் பேசும்போது, பிரியாணி பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

பிரியாணி குறித்து பேசியுள்ள பிரகாஷ் ராஜ், “இருப்பதிலேயே மட்டன் பிரியாணி தான் மிகச்சிறந்த உணவு. அதில் இருக்கும் அந்த மட்டன், ரைஸ், மசாலாவின் வாசத்தை நுகரும்போது அப்படி இருக்கும்.. சிக்கன் பிரியாணியும் நன்றாக இருக்கும். ஆனால் மட்டன் பிரியாணியில் இருக்கும் அந்த மசாலா தனி சுவை தான்.

மட்டன் பிரியாணி மட்டும் இல்லாமல் ஆம்பூர் பிரியாணி, ஸ்டார் பிரியாணி, குறிஞ்சி பிரியாணி, அம்சவல்லி பிரியாணி, லால் மாஸ் பிரியாணி, லக்னோவி பிரியாணி, ஹனுமன் தப்பன் பிரியாணி, ஐதரபாத் தம் பிரியாணி, லால்மாஸ் பிரியாணி, தலப்பாக்கட்டு பிரியாணி  என பல வெரைட்டி பிரியாணி உள்ளன.

 



 

பிரியாணிக்கு பாஸ்மதி, சீரக சம்பா, கந்தக சாலா உள்ளிட்ட பல வெரைட்டி ரைஸ் பயன்படுத்துகிறோம்.  பிரியாணி சாதாரண உணவு என்று கூறிட முடியாது” என்றார். உடனே, மதிய உணவுக்கு பிரியாணி இல்லை என்றால் வருத்தப்படுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “பிரியாணி இல்லை என்றால் பிரியாணியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஈவ்னிங் பிரியாணி சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு  படுத்து விடுவேன்” என்றார். 

 


2014ம் ஆண்டு வெளிவந்த உன் சமையலறையில் என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். அவருடைய தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியும், நடித்தும் உள்ளார். படத்தில் சமையல் மீது காதலும், ரசனையும் உள்ள கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், 2011ம் ஆண்டு சால்ட் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளிவந்த மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆக இருந்தது.