விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement


இந்நிலையில், இப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் பெயர் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இப்போது, படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில், நயன்தாரா இப்படத்திற்கு டப்பிங் பேச தொடங்கிறார். அதனை அடுத்து, நடிகர் பிரபு டப்பிங் பேசுவது போன்ற வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிரபு வீட்டு காபி சிறப்பாக இருந்ததாகவும், இதற்காக அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்ல வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து பேசிய பிரபு, “ஹீரோயின்ஸோடு டப்பிங் இல்லையா? தனியா டப்பிங் பேச விட்டுடீங்களே” என பிரபு கலாய்க்க, உடனே செஞ்சிடலாம் என விக்னேஷ் கமெண்ட் செய்த வீடியோ ரசிகர்களிடம் ஹிட்டாகி இருக்கின்றது.



இத்திரைப்படம் முழுக்க, முழுக்க பாண்டிச்சேரியில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். பாண்டிச்சேரியிலே படமாக்கப்பட்டிருந்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.  காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாராவும், சமந்தாவும் முதன்முறையாக இந்த படம் மூலம் இணைந்து நடிக்கின்றனர்.



ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் கார்த்தி கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண