காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் விக்னேஷ் சிவன் ரொம்ப பிஸி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மனிதர் நேற்று முன்தினம் தான் அவரது கண்மணியை(நயன்தாராவை அப்படி தான் சொல்றாரு...) டப்பிங் பேச வைத்து, அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து பதிவு செய்து, பலரின் வயிற்று எரிச்சலை பெற்றார்.

இப்போது என்னடானா... அதே படத்திற்கான டப்பிங் பணிக்காக இளைய திலகம் பிரபு வீட்டிற்கு அதிகாலையில் சென்று விட்டார். சிவாஜி சார் வீட்டில் உபசரிப்புக்கா பஞ்சம்... வந்தவருக்கு ஒரு கப் காபி கொடுத்துள்ளனர். அவ்வளவு தாவ், அதை குடித்து முடிப்பதற்குள் இருவரும் பரஸ்பரம் பேசி கலகலப்பாக்கிவிட்டனர். 



 

சியட்ஸ்... என ஆரம்பிக்கிறார் பிரபு. வெறும் காபி தான்... என வழக்கமான தனது அக்மார்க் சிரிப்போட அவர் கூறி, ‛சார்... நீங்க எது கொடுத்தாலும் நான் குடிச்சிடுவேன் சார்... நன்றி சார்... அதுக்கு தானே சார்... நான் இவ்வளவு சீக்கிரம் வந்தேன்...’ என விக்னேஷ் சிவன் கூறுகிறார். 


‛என்ன தனியா டப்பிங் வைக்கிறீங்க... ஹீரோயின்ஸ் கூட வெச்சிங்கனா தான் இன்னும் ஜாலியா இருக்குமே...’ என பிரபு நொந்து கொள்ள, ‛பேசிறேன் சார்... இம்மிடியட்ட ரெடி பண்றேன்...’ என விக்னேஷ் சிவன் சீரியஸாக பதிலளிக்கிறார். அதற்கும் வழக்கம் போல தன்னுடைய அக்மார்க் சிரிப்பை பரிசளிக்கிறார் இளைய திலகம் பிரபு.

அதன் பின் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவிக்கிறார் பிரபு. மீண்டும் ஒருமுறை சியர்ஷ் சொல்லிக் கொள்கின்றனர். டம்ளரில் இருந்த காபி தீர்ந்து விடுகிறது. ‛என்ன சார்... இது...’ என டம்ளரை பார்த்து விக்னேஷ் சிவன் கூற, ‛வேணுமா...’ என பிரபு கேட்கிறார். 





‛வேணும் சார்... ஒரு குடம் நிறைய வேணும் சார்...’ என விக்னேஷ் சிவன் கேட்க, அவரது தொடையில் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரபு. 

என்ன ஒரே ஒரு குறை... பிரபுவோட ஆசையை விக்னேஷ் நிறைவேற்றினாரா... இல்லையா... என்பது தான் தெரியவில்லை. அதாங்க... ஹீரோயின்களோடு டப்பிங் பேச வேண்டும் என்றாரே! ஆமாம் யாரு ஹீரோயின்...? நமக்கு தெரிந்து ஒருவர் சமந்தா... மற்றொருவர்...? அட நம்ம கண்மனி தான்! தலைக்கு தில்லப்பார்த்தியா... அவர் ஆளை, அவர்டயே கலாய்ச்சிட்டாரு!