பிரபல நடிகரான பூ ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


பிரபல நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 




பிரபல நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விரைந்து நலம் பெற்றுவா தோழா!” என்று பதிவிட்டு இருக்கிறார். 


 






 ‘பூ’ படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகர் ராம். இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ராம் அதன் பின்னர் பூ ராம் என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்பறவை படத்தில் விஷ்ணு விஷாலுக்கு தந்தையாக நடித்திருந்தார். மகனை கண்டிக்கும் தந்தையாக அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.


 


அதனைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘ பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த ராம் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருந்தார். அந்தப்படத்திலும் இவரது நடிப்பு நல்ல பாராட்டை பெற்றது. அடிப்படையில் நாடக கலைஞரான இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கிறார்.