தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் உள்ள பல கலைஞர்களுக்கு இவர் நெருக்கடியான நேரத்தில் உதவி செய்துள்ளதை பலரும் தெரிவித்துள்ளனர்.


அஜித் செய்த அந்த செயல்:


இந்த சூழலில், தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் பொன்னம்பலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நடிகர் அஜித்தை என் தம்பி மாதிரினு சொல்றதுக்கு காரணம் இருக்கு. என்கூட ஒரு டிரைவர் இருக்காரு என் ப்ரண்டும் கூட. அப்துல் ரசாக். அவருடைய மகனுக்கு இதயத்துல ஓட்டை. அப்போ இரண்டரை லட்சம் தேவைப்பட்டது.


நான் சொல்றது 25 வருஷத்துக்கு முன்னாடி. அப்போ குஷ்பு மேடம், மணிவண்ணன் சார் எல்லாருமே ஹெல்ப் பண்ணாங்க. கடைசியில 58 ஆயிரமோ, 52 ஆயிரமோ ரூபாய் தேவைப்பட்டது. நம்ம விஜயா ஹாஸ்பிட்டல்ல பணம் கட்டனும். நாளை மறுநாள் ஆபரேஷன். ஒருநாள்தான் இருக்குது.


தம்பி என்று கூறியது ஏன்?


அந்த நேரத்துல ஹெல்ப் தேவைப்பட்டது. அந்த நேரத்துல அப்துல் ரசாக்கை அஜித்சார்கிட்ட கூப்பிட்டு போறேன். இதே அஜித்சார்கிட்ட காலையில சொன்னேன். சொன்னவுடனே சரி தலைவரே அப்படினு சொன்னாரு. அதுக்கு அப்புறம் ப்ரேக் டைம்ல. சாப்பாடு லஞ்ச் சாப்பிட போறப்ப ஜி அந்த மேட்டர்னு அப்படி சொன்னேன்.


அது 11 மணிக்கே பணம் கட்டியாச்சே அப்படினு சொன்னார். அந்தளவுக்கு மனிதத்தன்மை அவருக்கு இருக்கு. அன்னைக்கு நான் எவ்வளவோ பேருகிட்ட கேட்ருக்கோம். தோல்வியில முடிஞ்சுருச்சு. இவருகிட்ட சொல்லி லஞ்ச் டைம்ல என்னனு கேக்குறதுக்குள்ள கரெக்டா செட்டில் பண்ணிட்டாரு அங்க. அந்த விஷயம் உதவி பண்ற விஷயம் எனக்குப் பிடிக்கும். அதுனாலதான் அவரை என் தம்பினு சொல்றேன். இது பலருக்கு புரிய மாட்டேங்குது. இதை அப்பவே பல பேட்டியில நான் சொல்லிருக்கேன்.


நாம பேசி ரெண்டு, மூணு தடவை போயிதான் பணம் கிடைக்கும் எப்பவுமே. ஆனா பேசி இரண்டாவது தடவை அது என்னனு கேக்குறதுக்கு முன்னாடியே பணம் கட்டியாச்சுனு சொல்றது, அவங்க மனைவி(ஷாலினி அஜித்) தான் பணம் கட்டுனாங்க. அந்தளவு எனக்கு அஜித்தைப் பிடிக்கும்”


இவ்வாறு அவர் பேசினார்.


தமிழ் திரையுலகில் 90 களில் வெளிவந்த பல திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக திரையில் தோன்றி மிரட்டியவர் பொன்னம்பலம் ஆவார். இவரை கபாலி என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, அர்ஜூன், விஜய், அஜித் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீப நாட்களாக திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பொன்னம்பலம் அசத்தி வருகிறார்.


அஜித்துடன் இணைந்து இவர் அமர்க்களம், முகவரி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.