மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் 

Continues below advertisement

இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது

"பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ். உன்னுடைய இயக்குனரோ தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது. என்னுடைய வீட்டில் பவேஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவேஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவேஷ்."

Continues below advertisement

நடிகர் பவிஷ் பேசும்போது,

"எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன். தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.  பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார். சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார்" என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது

நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள். நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.