தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைல், ரசிகர் பட்டாளம் கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிம்புவின் திறமை பற்றி அனைவரும் அறிந்ததே. தன்னுடைய பேச்சு, ஸ்டைல், தெளிவு அனைத்திலும் தந்தையின் சாயல் தெரிந்தாலும் இந்த குட்டி 16 அடியை தாண்டியும் பாயும் திறன் கொண்டது.
மீள முடியாத சந்தோஷத்தில் சிம்பு ரசிகர்கள் :
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் வெற்றியில் இருந்து மீளாத சிம்பு ரசிகர்களை மீண்டும் தனது அடுத்த திரைப்படம் மூலம் மூழ்கடிக்கவுள்ளார். தற்போது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக தயாராக உள்ள திரைப்படம் 'பத்துதல'. கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற ' முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் பிலிம் தான் 'பத்துதல'. இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
சிம்பு - பார்த்திபன் சந்திப்பு :
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குனரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிகர் சிம்புவை சந்தித்து பேசி ஒரு அழகான புகைப்படத்தை கிளிக் செய்து அதை நமக்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஒரு அழகான குறிப்பையும் அவரின் வழக்கமான வார்த்தை ஜாலத்தால் வெளியிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
"ஒரு இரவின் ஒளியில்…
பத்து தலையுடன்! பத்து தலையின் மொத்த மூளையும் ஒத்த தலையில். விசேட திறமையை பெற்றவர். பெற்றவரிடமிருந்தும், தான் பெறும் அனுபவத்திலிருந்தும் கற்றவர். சந்திக்கும் போது மட்டும் இணையும் நாள் குறித்து சிந்திப்போம். இணையும் நாளில் வெற்றியை சந்திப்போம்".
புதிய பாதை 2 படத்தின் ஹிரோ யார் ?
இந்த இருவரும் மத்தியில் என்றுமே ஒரு இனிமையான உறவு இருந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் "உங்களின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்தது 'புதிய பாதை' திரைப்படம். இப்படம் ரீமேக் படமாக எடுக்க பட்டாலோ அல்லது இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டாலோ எந்த ஹீரோ இந்த படத்தில் நடிக்க பொருத்தமானவராக இருப்பார்? என்று நடிகர் பார்த்திபனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தயக்கமின்றி 'புதிய பாதை படத்திற்கு சிறப்பான சாய்ஸ் என்றால் அது நடிகர் சிம்பு தான்' என பதில் அளித்துள்ளார். பார்த்திபன் கூறியது போலவே 'புதிய பாதை 2' தயாரிக்கப்பட்டால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். அவர் ட்விட்டர் குறிப்பில் கூறியது போல் இருவரும் இணைந்து சிந்தித்து ஒரு தரமான வெற்றியை சந்திக்க வாழ்த்துக்கள். அது தான் ரசிகர்களின் விருப்பமும். ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது தானே ஒரு கலைஞரின் கடமை.