தனது நெருங்கிய நண்பராக இருந்த சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தன்னை நடத்திய விதம் குறித்து நடிகர் பாண்டி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சிவகார்த்திகேயன்


மிமிக்ரி, ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பிரபலமாகி பின் துணை நடிகராக நடித்து, இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்துள்ள சிவகார்த்தியேனுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.


சமீபத்தில் சிவகார்த்திகேயன்  நடிப்பில் வெளியான அயலான் படம் உலக அளவில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது.  அதே நேரத்தில் அவர் மீது தொடர்ச்சியான விமர்சனங்களும் சமூக வலைதளங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பாண்டி சிவகார்த்திகேயன் பற்றி பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.


எனக்கு கைகால் நல்லாதன் இருக்கு


அங்காடித் தெரு, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை சிரித்து மகிழ வைத்தவர் நடிகர் பாண்டி. காமெடியன் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்துக் கொண்டிருந்த அவர், இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாம போனார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாண்டி நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.






அதில் அவர் “நானும் சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எனக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லாதபோது நான் அவரிடம் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்றிருந்தேன்.


அப்போது சிவகார்த்திகேயனின் மேனேஜர் என்னிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் கொடுத்தார். “எனக்கு பணம் எல்லாம் வேண்டாம், என் கை கால் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. நடிக்க ஏதாவது வாய்ப்பு இருந்தால் கொடுங்கள்” என்று நான் அவரிடம் சொன்னேன். சிவகார்த்திகேயன் கொடுத்த பணம் என்பதால் என் அம்மா அதில் ஒரே ஒரு இருபது ரூபாய் நோட்டை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொன்னார். அந்த மேனேஜர் உள்ளே போய் என்ன சொன்னாரோ தெரியவில்லை அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் என்னிடம் சுத்தமாகப் பேசவில்லை“ என்று பாண்டி தெரிவித்தார்.


எஸ்.கே 21


தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இசையமைத்து வருகிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.