சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வசூலை அள்ளும் மாவீரன்
மண்டேலா படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகி கலவையான விமர்சங்களைப் பெற்று வருகிறது.
ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சிவகார்த்திகேயன் கொண்டிருக்கும் நிலையில், இப்படம் வசூல் ரீதியாகக் கலக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரீல் மகனை வாழ்த்திய மாவீரன்
அதன்படி கடந்த நான்கு நாள்களில் மாவீரன் திரைப்படம் 50 கோடிகளுக்கும் மேல் வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசித்துவரும் நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் தான் அங்கு மாவீரன் படத்தைப் பார்த்து ரசித்த புகைப்படத்தைப் பகிர்ந்து இணையத்தில் வாழ்த்தியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சீமராஜா படத்தில் நெப்போலியன் நடித்திருந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் படத்தை வாழ்த்தி நெப்போலியன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "மாவீரன்" திரைப்படத்தை நாங்கள் அனைவரும் இன்று நாஷ்வில்லி டென்னசியில் பார்த்டு மகிழ்ந்தோம். நல்ல பொழதுபோக்கு திரைப்படம். தயவு செய்து நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று பாருங்கள்..! சிவகார்த்திகேயனின் கரியரில் இது ஒரு ஹிட் திரைப்படம் எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இதேபோல் அமெரிக்க சுதந்திர தினத்தை குடும்பத்துடன் கொண்டாடி நெப்போலியன் பதிவிட்டிருந்தது. இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. தன் மகனின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று குடியேறிய நெப்போலியன், தன் சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாகப் பதிவிட்டு வருகிறார்.
இதேபோல் அமெரிக்க சுதந்திர தினத்தை குடும்பத்துடன் கொண்டாடி நெப்போலியன் பதிவிட்டிருந்தது இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. தன் மகனின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று குடியேறிய நெப்போலியன், தன் சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாகப் பதிவிட்டு வருகிறார்.
மாவீரன் கதை
மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் காமிக்ஸ் வரைபடக் கலைஞராகவும், மிஷ்கின் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர். நடிகை அதிதி ஷங்கர் பத்திரிகை துறையில் வேலை பார்ப்பவராக நடித்துள்ளார். யோகிபாபுவின் காமெடி இப்படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் 80களின் பிரபல நடிகை சரிதா இந்த படத்தில் நடித்துள்ளார்.