பாலையா

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் மகன் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தெலுங்குத் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் நந்தி விருதை மூன்று முறை பெற்றுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா. நரசிம்ம நாயுடு படத்திற்காக 2001 ல், சிம்ஹா படத்திற்காக 2010ல் மற்றும் லெஜண்ட் படத்திற்காக 2014ம் ஆண்டும் சிறந்த நடிகருக்கான நந்தி விருது இவருக்கு  வழங்கப்பட்டுள்ளது . 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலையா வருடத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து விடுகிறார். கடந்த ஆண்டு பகவந்த் கேசரி வெளியாகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கலுக்கு டாக்கு மகாராஜ் படம் வெளியிட்டுள்ளார்.

டாக்கு மகாராஜ் வசூல் 

பாபி கொல்லி இயக்கத்தில் பாலையா , ஊர்வசி ராடெல்லா நடித்துள்ள டாக்கு மகாராஜ் திரைப்படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகியது. முன்னதாக இப்படத்தின் பாடலில் பாலையா ஊர்வசி ராடெல்லா ஆடிய நடனம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலையா ரசிகர்கள் தவிர்த்து இந்த படத்தை வீடியோ எடுத்து மீஸ்ம் போடவே ஒரு தனிப்படை படம் பார்க்க சென்றது. 

டாக்கு மகாராஜ் திரைப்படம் முதல் நாளில் 22.5 கோடி வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. டாக்கு படத்தின் வெற்றி விழா நேற்று படக்குழு கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது பாலையா மற்றும் ஊர்வசி வைரல் பாடலுக்கு நடனமாடினார். இதை பார்த்த ரசிகர்கள் படத்தில் டான் அடித்து அடித்து டார்ச்சர் செய்கிறார் என்று பார்த்தால் நிஜத்திலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை டார்ச்சர் செய்கிறார் பாலையா என ட்ரோல் செய்து வருகிறார்கள்.