பிரபல தமிழ் ஹீரோவின் மனைவி இன்ஸ்டாகிராமில் தனக்கு அனுப்பப்பட்ட ஆபாசமான வீடியோக்கள் தொடர்பாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.
ஷங்கரின் 'பாய்ஸ்' மற்றும் 'காதலில் விழுந்தேன்' படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் நகுல், நடிகை தேவயானியின் தம்பி ஆவார். அவர் 2016 முதல் தனது பள்ளி தோழியை ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். மேலும் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நகுல் மற்றும் ஸ்ருதி இருவரும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். தங்களின் வாழ்க்கையில் நிகழும் தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்கள். கடந்த சில நாட்களாக ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் பலமுறை அவர்களை எச்சரித்தும், அவர்கள் அசிங்கமான நடத்தையை நிறுத்தாததால் அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் பெண்களின் உடைகள் மற்றும் அவர்களின் நடத்தை குறித்து அவதூறான பதிவுகள் நிரப்பப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சக பெண்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பும் வக்கிரமானவர்களை தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்