மீண்டும் தமிழில் நாகர்ஜூனா
ரட்சகன் படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து இரு படங்களில் நடித்து வருகிறார் நாகர்ஜூனார். ஒன்று தனுஷ் நடித்துள்ள குபேரா மற்றொன்று ரஜினியின் கூலி. குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் கூலி வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களிலும் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரங்கள் நாகர்ஜூனா நடித்துள்ளார். இரு கதாபாத்திரங்கள் பற்றியும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியுள்ளார்
கூலி படம் பற்றி நாகர்ஜூனா
"ஒரு பக்கம் குபேரா இன்னொரு பக்கம் கூலி என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். சேகர் கம்முல்லா எதார்த்தத்திற்கு நெருகமான கதைகளை எடுப்பவர் மறுபக்கம் லோகேஷ் எதார்த்தத்தை மிஞ்சிய கதாபாத்திரங்களை சிறப்பாக உருவாக்கக் கூடியவர். குபேரா படத்தில் ஒரு காட்சியில் நான் நடந்து வர வேண்டும். அப்போது நான் ஹீரோ மாதிரி நடந்து வருவதாகவும் கொஞ்சம் சாதாரணமாக நடந்து வரச் சொல்லி இயக்குநர் சேகர் கம்முலா சொன்னார். அதுவே கூலியில் லோகேஷ் சார் நீங்க புலி மாதிரி நடந்து வர வேண்டும் என்று சொல்வார். கூலி படத்தில் லோகேஷ் என்னை காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என்னை இந்த மாதிரி காட்டியதற்கு லோகேஷூக்கு நன்றி சொன்னேன். இது முழுக்க முழுக்க விசில் பறக்கும் ஒரு படமாக இருக்கும் " என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்
கூலி
கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினி , நாகர்ஜூனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளார்.