இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான குபேரா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 100 கோடி கிளப்பிலும் இணைந்திருக்கிறது. ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. இந்நிலையில், நடிகர் நாகர்ஜூனா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
குபேரா இசை வெளியீட்டு விழா
குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், தன்னை பற்றி வதந்திகளை எவ்வளவு பரப்பினாலும், ஒரு செங்கலைக் கூட அசைக்க முடியாது. தன்னை விமர்சிப்பவர்களுக்கு கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா என்றும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என கூறினார். மேலும், தனுஷின் பேச்சும் மாடுலேசனும் ரஜினியை காபி அடித்தது போல் என்றும் விமர்சிக்கப்ப்ட்டது. இவர் யாரை இப்படி கூறுகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. அதேநேரத்தில் இசை வெளியீட்டு விழாவின் போது நாகர்ஜூனாவை பேச அழைத்த போது தனுஷ் முந்திக்கொண்டு சென்றதும் விமர்சனத்திற்கு ஆளானது. சீனியர் நடிகரை அவமதித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
தமிழில் சோதனையை சந்தித்த குபேரா
குபேரா திரைப்படம் தமிழில் 23 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆனால், தெலுங்கில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படம் வெளியான 13 நாட்களில் ரூ.134 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த வெற்றி விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, இந்திய சினிமாவில் ஒரு பிச்சைக்காரனாக தனுஷை தவிர யாரும் நடித்திருக்க முடியாது. இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நாகர்ஜூனா சர்ச்சை பேச்சு
தற்போது வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இண்டியா படமாகவே வெளியிடப்படுகிறது. இதுபோன்ற படங்களை ரசிக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் நாகர்ஜூனா சமீபத்தில் அளித்த பேட்டியில், கொரோனாவுக்கு பின்பு மற்ற மொழி படங்களையும் மக்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், எல்லா படங்களும் பான் இண்டியா படமாக இருக்க முடியாது. அதுபோன்ற படங்களை இயக்க தனித்திறமை வேண்டும். அதற்கான கதையும் திட்டமிடலும் அவசியம் தேவைப்படுகிறது. ஆ