நான் இந்த ஹீரோவோட மிகப்பெரிய ரசிகன்..அவரோடு நடிக்க விரும்புகிறேன்...நாகசைதன்யா சொல்வது யாரை தெரியுமா?

இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சிங் சத்தா”.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருடன் தான் நடிக்க விரும்புவதாக பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சிங் சத்தா”. இந்த படத்தை ஆமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படமானது நாளை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதே தேதியில்  ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ரக்‌ஷா பந்தன் படமும் வெளியாகவுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இவர்கள் படத்தால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை புரொமோட் செய்ய  ஆமீர்கான் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னை வந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், நாக சைதன்யா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இதற்கிடையில் இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நாக சைதன்யாவிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள்? என கேள்வி கேட்கிறார். அதற்கு நாக சைதன்யாவோ எந்தவித யோசனையும் இல்லாமல், சூர்யாவின் பெயரை சொல்கிறார். உடனே தொகுப்பாளர் விக்ரம் படத்தால் ஈர்க்கப்பட்டதால் அப்படி சொல்கிறீர்களா என கேட்கிறார். இல்லை நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர். அவருடன் திரையில் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola