நடிகர் மன்சூர் அலிகான் மாட்டை குளிப்பாட்டும் வீடியோ அனைவரையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் மகா வில்லனாக நடித்தவர் மன்சூர் அலி கான் (Mansoor Ali Khan). இவர் நடித்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரும் பொருத்தமாக இருந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர். ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஜய், விஜயகாந்த உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், அரசியல் பக்கம் போய்பார்க்கலாமே என்று வந்தார். அதற்கு அடுத்து நடந்தது உங்களுக்கு நினைவு இருக்கும். ஒரு பக்கம் தனக்கு வரும் படவாய்ப்புகளில் நடித்து கொண்டிருந்தாலும், தனது வாழ்க்கையை தன்போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் நடித்த வீரபத்ரன் ரோல் இவரை அனைவரிடலும் கொண்டு சேர்த்தது. மேலும், மன்சூர் அலி கான் என்றதும் அவருடைய நடனமும் நகைச்சுவையும் நினைவுக்கு வரும். ‘ஆட்டமா தேரோட்டமா’, ’சக்கு சக்கு வத்திக்குச்சி’ மற்றும் ’காபி தண்ணி போடட்டுமா ’ உள்ளிட்ட பாடல்களில் இவரின் நடனம் சிறப்பாக அமைந்திருக்கும்.
சமீபத்தில் மன்சூர் அலி கான 27 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலுக்கு உற்சாகத்துடன் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலனாது.
இப்போது, மன்சூர் அலி கான், மாடு குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இதை பாராட்டியும், மகிழ்ச்சியுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.
மன்சூர் அலி கான் தன் வீட்டில் மாடு வளர்க்கிறார். மாட்டுடன் பேசிக்கொண்டே அதை குளிப்பாட்டும் வீடியோ பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது என்பது காலப்போக்கில், அதுவும் குடும்பத்தில் ஒன்றாக மாறிப்போய்விடும். மாடும் அப்படிதான். அதுவும், மன்சூர் அலி கான் தனது மாடுடன் கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டே அதை குளிப்பாட்டுகிறார்.
“ பாரு, உடலெல்லாம் அழுக்கு இருக்கு; கொம்பில் அழுக்கு இருக்கு; இதோ குளிச்சா சரியாகிடும்ல...” என்று மாடுடன் உரையாடும் மொழியும், அவரிடன் அன்பும் பார்ப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. சினிமாவில் வேண்டுமானால், வில்லனாக நடித்திருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மன்சூர் அலிகான் தனக்குள் இருக்கும் குழந்தையை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் என்று சொல்ல தோன்றுகிறது.
" ராசாத்தி எவ்ளோ சூடா இருக்கு.. வா குளிக்கலாம்.” என்பது அவரின் அக்கறையையும் அன்பையும் காட்டுகிறது. ”ராசாத்தி இதோ குளிச்சி முடிச்சாச்சு” என்று அவர் செல்லமாக மாட்ட்டை குளிப்பாடி வெயிலுக்கு அழைத்துச் செல்கிறார்.
நம்மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதில் எப்போதும் விலங்குகளே முதன்மையானவை. மன்சூர் அலி கான் மாடை கொஞ்சி கொண்டே, குளிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்