நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவருமே ஏற்கனவே திருமணம் செய்துக்கொண்டவர்கள். அந்த வாழ்க்கையில் இருந்து முறையாக பிரிந்து திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு டீன் - ஏஜ் வயதில் மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தங்கள் வாழ்க்கை குறித்தும் , ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம் குறித்தும் இருவரும் பகிர்ந்துள்ளனர். தங்களின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய நடிகர் சரத்குமார் ”கணவன் மனைவியாக இருந்தால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். நாங்கள் கணவன் மனைவியான பிறகு எங்கள் இருவருக்குமே நிறைய பாதிப்புகள் இருந்தது. அதிலிருந்து மீண்டு நாங்கள் ஒற்றுமையாக இருந்த பொழுது, நாங்கள் இருவருமே எங்களை நன்றாக புரிந்து கொண்டோம். இருவருமே நண்பர்களாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம். நான் நாளுக்கு நாள் இளமையாக மாறிக்கொண்டிருப்பதால் என்னை மட்டம் தட்டிவிடலாமானு நினைக்கிறாங்க. குறிப்பாக உனக்கு காலெல்லாம் வலிக்குதுல மாமா உனக்கு வயசாயிடுச்சுனு சொல்லுறாங்க... அதன் மூலமா அவங்க என்ன சொல்ல வற்றாங்கன்னு நினைப்பேன்...”என்கிறார் நகைச்சுவையாக.

Continues below advertisement

Continues below advertisement

ராதிகாவும் சரத்குமாரும் திருமணத்திற்கு முன்னதாக ஒன்றாக திரையில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூர்ய வம்சம் . அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சுவார்ஸ்யம் ஒன்றை இருவரும் பகிந்துள்ளனர். இது குறித்து சரத்குமார் கூறுகையில் “நான் சூர்ய வம்சம் திரைப்படத்திற்காக வேட்டி , சட்டையெல்லாம் அணிந்துக்கொண்டு ரெடியாகிவிட்டேன். ஆனால் ஷூட் தாமதமாகும் என கூறியதால் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை கிராஸ் ஆன ராதிகா, சரத் என அழைத்தார். என்னை இன்னும் அழைக்கவில்லை நான் வருகிறேன் போ என்றேன். அதன் பிறகு போனை கட் செய்துவிட்டு வரும்பொழுது விக்ரமனும் ராதிகாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் விக்ரமனுக்கு பின்னால் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ராதிகாவிடம், இந்த ஹீரோ எப்போ பார்த்தாலும் ஹேர்ள் பிரண்ட்ஸோட பேசிட்டே இருக்காரு.. அப்படி இப்படி என என்னை திட்டிக்கொண்டிருந்தார். நான் கோபத்தில் ஷூட்டிங்கிற்கு மார்க் போட்டிருந்த இடத்தில் வந்து நின்றேன். உதவியாளர் மார்க் இதுதான் என விளக்கம் கொடுக்க அவர்க்கிட்ட “தெரியும் போ” என்றதும் என்ன கோவமா இருக்காரு என சென்றுவிட்டார். அதன் பிறகு இப்படி நில்லுங்கள்.. டயலாக் இதுதான் என மாறி மாறி எல்லோரும் சொன்னதும் வேட்டியை கழட்டி போட்டுவிட்டு சென்றுவிட்டேன்.. ராதிகா பக்கத்தில் நின்று கூல் கூல் என சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென ஷாக் ஆகிட்டாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் ஏன் வேட்டியை கழட்டி வீசினேன்னு எனக்கு தெரியலை. அதன் பிறகு விக்ரமன் சமாதானம் செய்து நடிக்க வைத்தார்.” என சூர்ய வம்சம் சமயத்தில் நடந்த சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார்.

சரத்குமாரிடம் தனக்கு மிகவும் பிடித்தது அவரது கர்ணன் குணம் என்கிறார் ராதிகா. யாருக்காவது சரத்குமார் உதவி செய்திருந்தால் அதனை மொபைலில் செய்தியாகத்தான் ராதிகாவிற்கு தெரியும் என்கிறார்.