நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தின் டைட்டில் லுக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்து தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது  மோஸ்ட் வாண்டட் நடிகராக உள்ளார். நடிகர் விஜய்க்கு பின் பேமிலி ஆடியன்ஸை ரசிகர்களை கொண்டுள்ள தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையிலான படங்களில் நடித்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டுள்ள சிவகார்த்திகேயன் கடைசியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்திருந்தார். 






இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அயலான், பிரின்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், யோகிபாபு நடித்து பாராட்டைப் பெற்ற  மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினின் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு 2 முறை தள்ளிப்போன நிலையில் இன்று காலை 10.10 மணிக்கு படத்தின் டைட்டிலை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 22வது படத்திற்கு ”மாவீரன்” என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் மாவீரன் படம் வெளியானது. அதேபோல் தெலுங்கில் ராஜமௌலி இயக்கி 2009 ஆம் ஆண்டு வெளியான மகதீரா படத்திற்கு தமிழில் மாவீரன் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயனின் படத்திற்கும் மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளதால் இப்படத்திற்கும் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண