மாதவன்
தமிழ் , இந்தி என இரு மொழிகளிலும் அங்கீகாரம் பெற்ற நடிகர் மாதவன். ரொமாண்டிக் ஹீரோ , தந்தை , விஞ்ஞானி , குத்து சண்டை பயிற்சியாளர் என தனது கரியரில் தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிப்பு தவிர்த்து மாதவன் ஒரு தீவிர பைக் பிரியரும் கூட, சமீபத்தில் இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 ரக மோட்டர் பைக்கை சொந்தமாக்கினார் மாதவன். மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு வேதாந்த் என்கிற 19 வயது மகன் உள்ளார்.
துபாயில் மாதவன் வாங்கிய போட்
கொரோனா பரவலின்போது நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் துபாயிற்கு குடிபெயர்ந்தார். அப்போ சொந்தமாக போட் ஒன்றை வாங்கியுள்ளார் மாதவன். சமீபத்தில் மாதவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இதுகுறித்து பேசினார். " என்னிடம் ஒரு சின்ன போட் இருக்கிறது. அது எனக்கும் என் குடும்பத்திற்கும் போதுமானது. ஒவ்வொரு வருடமும் ஏதாவது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்று நினைப்பேன். அந்த வகையில் படகு ஓட்டும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை. 15 நாட்களுக்கு உட்கார்ந்து படித்துவிட்டு பரிட்சை எழுத வேண்டும். அவ்வளவு தான் "
ஜி.டி நாயுடு பையோபிக்
முன்னதாக நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இயக்குநராகவும் பாராட்டுகளை பெற்றார் மாதவன். அடுத்தபடியாக மாதவன் பிரபல பொறியியளாலர் ஜி.டி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றியில் நடிக்க இருக்கிறார். இப்படத்தி ஜி.டி,.என் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படத்தின் அறிவிப்பு வெளியானது