பார்க்கிங்


ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் பார்க்கிங்க் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்து ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளாது. சில மாதங்களுக்கு முன்பாக பார்க்கிங் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து சமீபத்தில்  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


பார்க்கிங் பிரச்சனை


ஐ.டி.யில் வேலை பார்த்து சொந்தமாக வீடு வாங்கி தனது மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் சொந்தமாக கார் ஒன்றை வாங்குகிறார். இவருக்கும் கீழ் வீட்டில் இருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் இருக்கும் ஒரு இடத்தில் யார் தன்னுடைய காரை நிறுத்துவது என்கிற போட்டி வருகிறது. ஒருவரை ஒருவர்  ஜாலியான கலாட்டாவாக போய்க் கொண்டிருக்கும் ட்ரெய்லர் ஒரு இடத்தில் சீரியஸாக மாறுகிறது. சாதாரன ஆளாக இருந்த எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் லெவலுக்கு இந்தப் படத்தில் திடீரென்று வில்லனாக மாறிவிடுகிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து ஹரிஷ் கல்யாண் எப்படி வெளியே வருகிறார் என்பதே பார்க்கிங் படத்தின் கதையாக இருக்கிறது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது பார்க்கிங் திரைப்படம்.






லோகேஷிடம் விருப்பத்தைத் தெரிவித்த எம் எஸ் பாஸ்கர்


பார்க்கிங் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசி அவர்  பார்க்கிங் திரைப்படத்தை தான் முன்பே பார்த்துவிட்டதாகவும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆவதற்கான அனைத்து தகுதியும் இந்தப் படத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கருடன் வேலை செய்வது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.


லோகேஷ் கனகராஜைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் எம் எஸ் பாஸ்கர் பார்க்கிங் படம் குறித்து பேச தன்னுடைய  சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றி பேசினார். இதனையடுத்து தீவிர கமலின் பக்தரான லோகேஷ் கனகராஜ் தனது அண்ணா கமல்ஹாசனையே இயக்கிவிட்டார். அவருடன் பயணிக்க  தான் விருப்பப் படுவதாகவும் தன்னுடைய படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு குடுக்கும்படி கேட்டுக்கொண்டார். தன்னைவிட வயதில் இளையவராக இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் பெரும்புகழ்பெற்றவர் என்று அவரை பாராட்டியுள்ளார் எம் எஸ் பாஸ்கர்.