Lollu Sabha Seshu: காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?
மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேஷூ அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொள்ளுசபா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திரைத்துறை பிரபலங்கள் பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. உணவு, தூக்கம் மறந்து சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் இதுபோன்ற உடல்நலக்குறைபாடுகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிலேயே ஏகப்பட்ட பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். இதனால் மற்றவர்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Just In




இதனிடையே மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் லொள்ளுசபா சேஷூ அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சி மூலம் தான் சேஷூ கலையுலக பயணத்தைத் தொடங்கினார். அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி தான் திருப்புமுனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். இப்படியான நிலையில் சேஷூ விரைந்து குணமாக ரசிகர்கள் பிராத்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.