இந்தியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி பிரபலமாக இருந்தாலும், சில மாநிலங்களில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். கேரளாவில் கால்பந்து விளையாட்டிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் கால்பந்து போட்டிகளும் அடிக்கடி நடைபெறும்.


ஆப்பிரிக்க வீரர் மீது நிறவெறி தாக்குதல்:


கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது மலப்புரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது அரிகோடு பகுதி. இங்கு கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கால்பந்து போட்டியில் விளையாடிய இரு அணிகளில் ஒரு அணிக்காக ஐவரி கோஸ்டாரிகா நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பங்கேற்றார். அவர் கறுப்பின வீரர் ஆவார்.


ஐவரி கோஸ்டாரிகா வீரரை ஜவஹர் மாவூர் கிளப் அணி தங்களுக்காக ஆட அழைத்து விடுத்ததன் காரணமாக, அவர் இந்த போட்டியில் ஆடியுள்ளார். இந்த போட்டியை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூடியுள்ளனர். அப்போது, கூட்டத்தில் இருந்து சிலர் அவர் மீது கற்களால் தாக்கியுள்ளனர். பின்னர், அவரை நிறத்தை வைத்து நிறவெறியுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர் அவரை கற்களால் தாக்கியதுடன் கும்பலாக சேர்ந்து அவரை துரத்தி, துரத்தி அடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






இந்த விவகாரம் தொடர்பாக, தாக்கப்பட்ட கால்பந்து வீரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், “ எங்கள் அணி ஒரு கோல் முன்னிலையில் இருந்தபோது கார்னர் கிக் எங்களுக்கு கிடைத்தது. நான் அதை அடிப்பதற்காக அங்கு கார்னரில் நின்றிருந்தேன். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் என்னை குரங்கு என்று அழைத்தனர்.


அப்போது, கூட்டத்தில் இருந்த ரசிகர்களில் ஒருவர் என் தலையில் கல்லால் அடித்தார். நான் திரும்பி பார்த்தபோது இன்னும் இரண்டு கற்களால் தாக்கினர். என்னைப் பார்த்து கத்த ஆரம்பித்தனர். அவர்கள் என்னை நோக்கி கற்களை எரிந்ததுடன், ஆப்பிரிக்கன் குரங்கு என்று கூறினார்கள். என்னை காப்பாற்றிக் கொள்ள நான் ஓட ஆரம்பித்தேன். எதிரணி ஆதரவாளர்கள் என் மீது கற்களை வீசினார். அவர்கள் என்னை கொடூரமாக தாக்கினர். எனது அணியின் ஆதரவாளர்கள் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தியதால் என்னை காப்பாற்றினர்கள். நானும் என் இனமும் அவமதிக்கப்பட்டோம். என் தோலில் நிறம் காரணமாக நான் தாக்கப்பட்டேன்.


இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு விளையாட வந்த மேற்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரை, உள்ளூர்வாசிகள் கும்பலாக சேர்ந்து மூர்க்கத்தனமாக நிறவெறியுடன் தாக்கியது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Mamata Banerjee: பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? டாக்டர் பரபரப்பு தகவல்..


மேலும் படிக்க:  Pocso On Yediyurappa: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோவில் வழக்கு; நடந்தது என்ன?