Paruthiveeran: ‘அமீர் மாமா மீது பழி சொல்லாதீர்கள்’ - கார்த்தி அமைதி காப்பதை கண்டித்த ‘பருத்திவீரன்’ குட்டிச்சாக்கு..!

படம் பாதியிலையே விட்டுட்டு போன நீங்கள் அதன் பிறகு அங்கு நடந்த சம்பவங்களை நேரில்' பார்த்த நபர் என்ற முறையில் நான் நன்கு அறிவேன்.

Continues below advertisement

பருத்திவீரன் படம் தொடர்பாக அப்படத்தில் நடித்த விமல்ராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் 16 ஆண்டுகளுக்குப் பின் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. நடிகர் கார்த்தி அறிமுகப்படம், பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்த படம், இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு திருப்புமுனை தந்த படம் என பல பெருமைகளை கொண்டது பருத்திவீரன் படம். இப்படிப்பட்ட படம் சர்ச்சையில் சிக்கியிருப்பதை திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் கூட விரும்பவில்லை. 

அப்படத்தால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக அமீரும், ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றம் சாட்டினர். மேலும் கார்த்தியின் ஜப்பான் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமீர் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்காததை தொடர்ந்தே பருத்தி வீரன் படம் தொடர்பான பிரச்சினை கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. 

ஒரு நேர்காணலில், “ஞானவேல்ராஜாவை ஒரு பேட்டியில் இயக்குநர் அமீரை திருடன் என விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஞானவேல்ராஜாவை கண்டித்து சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, பொன்வண்ணன், கவிஞர் சினேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கடுமையாக கண்டித்துள்ளனர். அதேசமயம் இந்த விவகாரத்தில் கார்த்தி,சூர்யா ஆகியோர் அமைதி காப்பதும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 


அந்த அறிக்கையில், “திரு ஞானவேல் அவர்கள் பேசிய காணொளியை பார்க்க நேர்ந்தது தெருக்களில் விளையாடி கொண்டிருந்த என்னை அழைத்து நடிப்பு சொல்லி கொடுத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த அமீர் மாமா மீது இப்படியான பழிகளை சுமர்த்தியது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. படம் பாதியிலையே விட்டுட்டு போன நீங்கள் அதன் பிறகு அங்கு நடந்த சம்பவங்களை நேரில்' பார்த்த நபர் என்ற முறையில் நான் நன்கு அறிவேன்.

படம் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சியான அமீர் மாமா அதன் பிறகு அவருக்கு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அதை அனைத்தையும் படபிடிப்பு தளத்தில் அருகில் இருந்து பார்த்தவன் நான். எனவே ஞானவேல் அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கும் கார்த்திக் அண்ணாவுக்கும் அது தான் முதல் படம். அவரும் அந்த சூழலை நன்கு அறிவார் தற்போது அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல்.

குறள்932:

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.

விளக்கம்:

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்” என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola