நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பிரபல காமெடி நடிகர் கிங்காங் மகள் 404 மதிப்பெண்கள் பெற்றுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று (மே 06) வெளியானது. கிட்டதட்ட 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ள இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மகாலெட்சுமி 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். 


மாவட்ட அளவை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடமும், ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் இரண்டாமிடமும், அரியலூர் மாவட்டம் 3ஆம் இடமும் பெற்றுள்ளது. 






இதில் பிரபல காமெடி நடிகர் கிங்காங் மகள் சக்தி பிரியா 600க்கு 404 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகளின் இந்த வெற்றியை குடும்பத்திடன் இனிப்பு வழங்கி கிங்காங் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘எனது மக்கள் எங்களை பெருமைப்பட வைத்துள்ளார், அவள் ஆசைப்பட்ட கனவை நிறைவேற்றுவது தான் எங்களுடைய விருப்பம். அவருக்கு பிடித்த கல்லூரியில் படிக்க வைப்போம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


 


உயரத்தில் குறைவாக இருந்தாலும் கிங்காங் மிகுந்த திறமை மிக்கவர். பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள அவர், நீண்ட காலமாக திரையுலகில் பயணித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். கிங்காங் - கலா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கிங்காங்கிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.