கிச்சா சுதீப் அன்னை காலமானார்
நான் ஈ, பாகுபலி, விஜய் நடித்த புலி, முடிஞ்சா இவன பிடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த கிச்சா சுதீப், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர். தமிழ், கன்னடம் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருபவர். நடிப்பு மட்டும் இல்லாமல் கிச்சா சுதீப் தயாரித்த 7 படங்கள் திரைக்கு வந்துள்ளன. இது தவிர்த்து கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
கிச்சா சுதீப்பின் அன்னை சரோஜா சஞ்சீவ் கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக பல்வேறு உடல் நல பிரச்சனைகளுடன் போராடி வந்தார். இப்படியான நிலையில் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி பெங்களூரில் அவர் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் முதல் கிச்சா சுதீப் ரசிகர்கள் அனைவரும் தங்கல் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அன்னையுடன் கிச்சா சுதீப் பந்தம்
தனது அன்னையுடன் கிச்ச சுதீப்பிற்கு மிகவும் நெருக்கமான பந்தம் இருந்துள்ளது. ஒவ்வொரு அன்னையர் தினத்தின் போது தனது அன்னையை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிடுவார். கடந்த அன்னையர் தினத்தின் போது தனது அம்மாவுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அவர் பதிவிட்டிருந்தார் . அதில் அவர் ' எனக்கு கொடுத்த எல்லாவற்றுக்காகவும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா' என அவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில் அவர் " எல்லாரும் என்னை கைவிட்டபோது நீ மட்டும் என்மேல் நம்பிக்கை வைத்தாய். சின்ன வயதில் நான் பள்ளியில் ஏதாவது பரிசு வாங்கும் போது நீ என்னை வரவேற்க காத்திருப்பாய் அதேபோல் தான் இன்றும் இருக்கிறாய் " என்று அவர் தெரிவித்துள்ளார்.