Just In





Video Karthik Kumar : தன்பாலின ஈர்ப்புடையவனா இருந்தா, தைரியமா சொல்வேன்.. கார்த்திக் குமார்
தனது முன்னாள் கணவர் தன்பாலின ஈர்ப்புடையவர் என்று பாடகி சுசித்ரா கூறியதைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்

சுசித்ரா
பிரபல பாடகியான சுசித்ரா மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் என்கிற ஹேஷ்டேக்கில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் மேல் குற்றம் சாட்டியிருந்தார் . இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் உடனான தனது திருமண உறவை முடித்துக் கொண்டார் சுசித்ரா. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு முறை நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் பல்வேறு அதிர்ச்சிகரமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.
என்னுடைய கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்புடையவர்
தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் மற்றும் தனுஷ் இணைந்து தனது பாஸ்வர்டை பயன்படுத்தி சுசி லீக்ஸ் என்று வதந்தியை கிளப்பிவிட்டதாக அவர் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் திருமணமான கொஞ்ச வருடங்களிலேயே தனது கணவர் கார்த்திக் தன்பாலின ஈர்ப்புடையவர் என்று தனக்கு தெரியும் என்றும், ஒரு முறை நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து ஒரு அறைக்குள் தூங்கியதை குறிப்பிட்டு அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியும் என்று அவர் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சுசித்ராவின் கருத்துக்கள் சமூக வலைதளத்தில் காட்டுத் தீப்போல் பரவி வருகின்றன. இப்படியான நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்பாலின ஈர்ப்புடையவனாக இருந்தால் தைரியமாக சொல்வேன்
இந்த வீடியோவில் நடிகர் கார்த்திக் “ நான் தன்பாலின ஈர்ப்புடையவனாக இருந்தால் அதை வெளியே சொல்வதற்கு எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. பாலியல் தேர்வு ஒரு ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விருப்பம் . நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவனாக இருந்திருந்தால் அதை தைரியமாக வெளியே சொல்லி இருப்பேன். அதை மறைத்து வைத்து இன்னொருவருக்கு கஷ்டம் கொடுப்பதில் எனக்கு எந்த வித அவசியமும் கிடையாது.
சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் பிரைட் மார்ச்சில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறேன். தன்பாலின ஈர்ப்புடையவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நீங்களும் அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நான் தன்பாலின ஈர்ப்பு இருந்திருந்தால் அதை சந்தோஷமாக சொல்வேன் அசிங்கப்பட மாட்டேன்” என்று கார்த்திக் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.