நடிகர் கார்த்திக் குமார் இரண்டாவது திருமணம்… பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!

வைபவ் & பிரியா பவானி சங்கர் நடித்த மேயாத மான், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் என்பரை கார்த்திக்குமார் தற்போது கரம்பிடித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்திக்குமார் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக முதன் முதலில் அறிமுகமானார். மேலும் வானம் வசப்படும், கண்ட நாள் முதல், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் வெப்பம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த Stand-Up காமெடியனாக பிரபலமடைந்த கார்த்திக்குமார் Stand-Up காமெடி நிகழ்ச்சிகளுக்கென்று இந்திய அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

Continues below advertisement

அவர் அவரது மனைவியான சுசித்ராவை சில பல சர்ச்சைகளுக்கு பின் விவாகரத்து செய்தார். சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு விவாதத்துக்குள்ளானார். பின்னர் அவரது ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறி பிரச்சனை ஓய்ந்தது. ஆனாலும் அவர் மீதான சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. பின்னர் நான்காவது பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார், தற்போது ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த புதிய ஜோடிக்கு பாராட்டுகி குவிந்து வருகின்றது.

அதன்படி கள்ளச் சிரிப்பு படத்தில் கதாநாயகியாகவும், இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வைபவ் & பிரியா பவானி சங்கர் நடித்த மேயாத மான் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் (Amrutha Srinivasan) என்பரை கார்த்திக் தற்போது கரம்பிடித்துள்ளார். சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை வினோதினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான் அவருக்கு திருமணமான தகவல் வெளியே வந்துள்ளது. நடிகர் கார்த்திக் குமார் - நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement
Sponsored Links by Taboola