சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் டீசர் தொடக்க நிகழ்ச்சியில் முன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன், பாரதி பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர். 


அதனைதொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி பேச தொடங்கினார். அப்பொழுது அவர், ”எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. என்ன என்னமோ பேசணும் வந்தேன். எல்லாம் மறந்துருச்சு. எனக்கு இது ஒரு முக்கியமான மேடை. மணி சாரோட அசிடண்ட்டா சுமோல லக்கேஜோட ஏறி போனேன். இன்னைக்கு மணி சார் இந்த மேடையை எனக்கு கொடுத்துருக்காங்க. அதுக்கு நான் மிக பெரிய நன்றி சொல்லிக்குறேன். 


நான் இங்க நிக்குறதுக்கு முக்கியமான காரணமான என் சகோதரர்கள், ஊடக நண்பர்கள், என் அம்மா, அப்பா எல்லோருக்கும் நன்றி. நம்மலாம் வரலாறு பார்த்து ஓடுற ஆட்கள், பாதி நேரம் தூங்கிருவோம். நான்லாம் தூங்குவேனே தெரியமா லைட்டா தூங்குவேன். 


அந்த முழிச்சு இருக்குற நேரம் கூட நம்மள யாரு ஆட்சி செஞ்சாங்க. நம்ம வளத்தை யாரு சூரை ஆடுனாங்க. நம்ம எப்படி அடிமையாக்கப்பட்டோம்ன்னு இந்த மாதிரி நிறைய செய்திதான் படிச்சுருப்போம். ஆனாலும் நம்ம தமிழன் தமிழன்னு சொல்லிட்டே இருக்கோம். அப்படி என்னடா நீ பெரிய ஆளுன்னு கேட்டா நம்ம யாருக்கும் சொல்ல தெரியாது. 


நம்ம நாடு எப்படி இருந்துச்சு, நம்ம அரசர்கள் எப்படி ஆட்சி செய்தாங்க.. நம்ம அரசாங்கம் எப்படி இருந்துச்சு.. அது தெரிஞ்சுகுறது ரொம்ப ரொம்ப அவசியம். சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு. சோழர்கள்ன்னு சொன்னாலெ கல்லணை. 2000 ஆயிரம் வருஷம் பழமையானது. அது இன்னும் அழியாம இருக்கு. வீர நாராயண ஏரி அங்க இருந்து இப்ப வரை தண்ணி வந்துட்டு இருக்கு. 20 கிலோ மீட்டர் அகலம், 7 கிலோ மீட்டர் நீளம், ராஜராஜ சோழன் அவரோட படையை வச்சு கட்டினாரு. 


அஷ்திவாராமே இல்லாம கட்டப்பட்ட நம்ம பெரிய கோவில். 216 அடி உயரம். அதுக்கு அப்புறம் வெள்ளகாரன் கூட கடலில் கரையோரமாதான் சவாரி பண்ணிட்டு இருந்தானாம். ஆனா நம்ம ஆளுங்க கடலுக்கு அடியில் பாதை இருக்குன்னு அத கண்டுபிடிச்சு போனாங்க. இன்னைக்கு வரைக்கும் தமிழ் நாடு அரசு கொண்டு வந்த பல திட்டங்கள் சோழர்கள் கொண்டு வந்தது. இப்படி இவ்வளவு சிறப்பு இருந்தும் வாட்ஸ் அப் மாதிரி தள்ளிவிட்டு போய்ட்டே இருக்கோம். இப்படி ஒரு படமா எடுத்து மணி சார் அடுத்த தலைமுறைக்கு பரிசா கொடுத்து இருக்காரு. 


நாம வரலாறு படிக்காம வரலாறு படைக்க முடியாது. இதை பார்த்து இளைய தலைமுறையில் ஒரு மாற்றம் வரும். வரலாற காப்பத்தணும் நினைப்பாங்க. எங்க அம்மாகிட்ட நான் வந்திய தேவன் கதாபாத்திரம் பண்ண போறேன்னு சொன்னேன். அவங்களுக்கு அந்த கதாபாத்திரம் மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்ன்னு நினைச்சாங்களாம். 


எனக்கு தெரிஞ்ச நண்பன்கிட்ட வந்திய தேவன் கதாபாத்திரம் பத்தி கேட்டேன். வந்திய தேவன ஒரு ஐஏஎஸ் ஆபிசர் மாதிரி நினைச்சுகோ. அவருக்கு எல்லா பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனா அவனுக்கு டிபார்ட்மெண்டே கிடையாது. ஆமா, அவன் ஒரு இளவரசன் ஆனா அவனுக்கு நாடே கிடையாது. அவனுக்கு பேராசை நிறைய இருக்கும். ஆனா நேர்மையான கதாபாத்திரம். 


இது மணிசார் கற்பனை. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. இதுக்கு உங்க எல்லாரோட அன்பு தேவை” என்று உரையை முடித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண