கடந்த 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா என நடிகர் கார்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், பையா, கைதி, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சுல்தான், சிறுத்தை, கொம்பன் என கிட்டத்தட்ட 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்தி விருமன் படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார். அவை இரண்டும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளனர்.
கார்த்தி நியூ லுக் :
நடிகர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் பல மாதங்களாக நடித்து வந்தார். அந்த படத்தை தொடர்ந்து 'விருமன்' படத்திற்கு நடிகர் கார்த்தி தாடியுடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்பட்டார். இப்போது, கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில்,” ஒரு பழக்கப்பட்ட இடத்திலிருந்து வெளிய வர கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா அதை நீங்கள் செய்வதால் அவ்வளவு மோசமாகவும் இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ள 'விருமன்' ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் நிலையில், 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ராஷி கண்ணா நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 24 ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு இந்த ஆண்டு முழுவதும் பிஸியா இருக்க போகிறார் கார்த்தி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்