நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோசியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்தி. 


சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் நியூஸ்:


இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வரும் செய்தி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பெற்றோராகி, இரட்டை ஆண் குழந்தைகளை தங்கள் வாழ்க்கையில் வரவேற்ற செய்தி. புதிதாக பெற்றோர்களான இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ட்விட்டர் மூலம் தனது அன்பான வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. 


 



வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்தி:


நடிகர் கார்த்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ஒரு வாழ்த்து அட்டையுடன் பூங்கொத்தை அனுப்பி "பெற்றோர்களாக உங்களை வரவேற்கிறேன். கடவுள் உங்கள் நான்கு போரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்ற வாழ்த்தை அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்தியின் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்து, நடிகரின் அன்பான வாழ்த்துக்கு நன்றி என பதிலளித்துள்ளார். 


 






 


வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை :


சுமார் ஐந்து வருடங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த காதல் ஜோடிகள் கடந்த ஜூன் மாதம் தான் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். ஞாற்றுக்கிழமை அன்று விக்னேஷ் சிவன் சோசியல் மீடியா மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன தகவலை அறிவித்தார். அதனுடன் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் குழந்தைகளின் கால்களை முத்தம் இடும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். "நயனும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்" என்று பகிர்ந்தார். 


 






 


வாடகைத்தாய் முறை சட்டவிரோதமானது :


வாடகை தாய் மூலம் இந்த தம்பதியினர் குழந்தைகளை பெற்றெடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத்தாய் முறை சட்டவிரோதமானது என ஜனவரி 2022 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நயன் - விக்னேஷ் சிவனிடம் இதற்கான விளக்கம் கேட்கப்படும் என தமிழக அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தமிழக அரசு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.