மதுரையில் நடந்த விருமன் இசை வெளியீட்டு விழாவிலும், விழா முடிந்து செய்தியாளர்களிடமும் நடிகர் கார்த்தி நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதோ அந்த பேட்டி மற்றும் பேச்சு.




‛‛மதுரை என்றாலே ஸ்பெசல் தான். விருமன் வரும் 12ஆம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படம் இது. கிராமத்தில் உள்ள வீரம், பாசம், கேளிக்கை என்பதே வேறுவகையில் இருக்கும். இது போன்ற கிராமம் சார்ந்து இங்கு வரும்போது மகிழ்ச்சியாக உள்ளது. 


ஒரே இயக்குனரிடம் இரு முறை நடித்துள்ளேன். இந்த நிகழ்ச்சி திருவிழா போல உள்ளது. மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வைத்து தான் சிறப்பு. சினிமாத்துறை சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு  இயல்பான ஒன்றுதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான். குலுக்கல் முறையில் தேர்வு செய்து ரெய்வு போவாங்க, அதில் பின்புலம் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் சினிமாத்துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகிவிடுகிறது,’’ 


என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கார்த்தி பேசினார்.






முன்னதாக விருமன் இசைவெளியீட்டு விழாவில், அவர் பேசும்போது, 


‛‛என்ன மாமா சவுக்கியமா என்ற அடையாளத்தை மதுரையை கொடுத்தது, அமீர் சார் இந்த மதுரையில் தான் என்னை உருவாக்கினார், ரசிகர்கள் ஒவ்வொருவரின் கைதட்டலும் உற்சாகமும் தான் என்னை இவ்வளவு பெரிய நிலைக்கு வந்துள்ளேன், கி்ராமத்து காதல் வேற கிராமத்தில் குடும்ப உறவுகளுக்காக வாழ்வதே சிறப்பு,  கிராமம் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டும் ஆசை அதனால் முத்தையாவுடன் இரண்டாவதாக படம் நடித்துள்ளேன், இந்த கதை சொல்லும்போது படத்திலயே அப்பாவே வில்லன் என்று கூறியவுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், பாரதிராஜா சார் உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன்.




எனது அப்பா என்னை நடிக்கவே கூடாது என்றார், சூட்டிங்கில் பெண்கள் இருந்தால் ஜாக்கிரதையாக பார்த்துகொள்ள வேண்டும் என அப்பா கூறுவார், எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோர் பெண்களை எப்படி பார்த்துகொள்வார்கள் என அப்பா சொல்லியிருக்கிறார்., பருத்திவீரன் மூலம் எனக்கு பெரிய அடையாளத்தை பெற்று தந்தவர் யுவன், இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும் என கூறியிருக்கேன், ஊரரோம் புளியமரம்பாட்டை கேட்டு் இரவில் கூட ஏராளமானோர் போன் செய்து சொல்லுவார்கள், கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் அண்ணன் கூட இணைந்துள்ளேன், முத்தையா சூட்டிங் முடித்து முத்தையா ஜிம்க்கு தான் செல்வார், மதுரையினாலே லுங்கிய தூக்கி கட்டினதால் கெத்து, மதுரை மண்ணுக்கு நன்றி!!!,’’


என்று கார்த்தி பேசினார்.