தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் இரண்டாவது மகளின் திருமணத்தில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்
வெங்கடேஷ் மகள் திருமணம்
தமிழில் வெளியான தனிகாட்டு ராஜா , வசந்த மாளிகளை, தெயவப் பிறவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் டி ராமா நாயுடு. தமிழ், இந்தி , கன்னடம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்த இவரது இரண்டாவது மகன் வெங்கடேஷ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 1971 ஆம் ஆண்டு வெளியான பிரேமா நகர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு ‘கலியுக பாண்டவாலு’ என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான ஆந்திர மாநில அரசின் விருதை வென்றார் அவர்.
நடிகர் வெங்கடேஷுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். அவரது மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில் தற்போது அவரது இரண்டாவது மகளான ஹயவாஜினியின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. மருத்துவராக இருக்கும் நிஷாந்த் என்பவை தனது மகளுக்கு மணம் முடித்து வைத்துள்ளார் வெங்கடேஷ். ஹைதராபாத்தில் இருக்கும் தனது தந்தைக்கு சொந்தமான ராமா நாயுடு ஸ்டுடியோவில் தனது மகளின் திருமனத்தை நடத்தி முடித்துள்ளார் அவர்.
இந்த திருமணத்திற்கு வெங்கடேஷ் தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளார். இந்த விருந்தினர்களை வெங்கடேஷின் உறவினரான நடிகர் ரானா டகுபதி வரவேற்றார். நடிகர் மகேஷ் பாபு இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது நடிகர் கார்த்தி இந்த திருமணத்தில் காணப்பட்டுள்ளார். நடிகர் வெங்கடேஷுடன் கைகோர்த்து மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது. நாளை மறுநாள் வரும் மார்ச் 18 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது
மேலும் படிக்க : Dhanush: லிஸ்ட் பெரிசாகிட்டே போகுதே... சிவகார்த்திகேயன் பட இயக்குநரை தட்டித்தூக்கிய தனுஷ்
Siragadikka Aasai:தெரிய வரும் உண்மை...ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!