பொன்னியின் செல்வன்:
பிரபல இயக்குனர் மணிரத்ணம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா ப்ரொடேக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ஸ் மூவீஸ் ஆகியவை இணைந்த வழங்குகிறது. படத்தில், ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த புத்தகத்தின் ரசிகர்களும் படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்தில், மந்தாகினி தேவியாக ஐஸ்வர்யா ராய்யும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரமும், குந்தவையாக நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளனர். இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் தினமும் ‘ரிவீல்’ செய்து வருகிறது படக்குழு.
ஆழ்வார்கடியானாக நடிகர் ஜெயராம்:
மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் திரையுலகிலும் அனைவருக்கும் அறிந்த முகம். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் இவருக்கு இவருக்கு இந்தியா ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இவர் பேசும் மலையாளம் கலந்த தமிழை ரசிப்பதர்கென்றே பலர் வரிந்து கட்டி கொண்டு வருவர். இவர் கமலுடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படத்தில் “என்ட மகனுக்கு ஹார்ட்ல தோளா..” இன்றுவரை அனைவரின் பேவரட் டைலாக். இப்படி தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி ரோலில் நடிக்கவுள்ளதாக முன்னரே தகவல் வெளியானது. கதையின் திருப்புமுனைக்கு முக்கிய கதாப்பாத்திரமாக விளங்கும் ஆழ்வார்கடியான் நம்பியின் ரோலுக்கு ஜெயராமை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் இன்று நடிகர் ஜெயராம், நம்பி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதை படக்குழு உறுதிசெய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
ஜெயராமை கலாய்த்த கார்த்தி!
ஆழ்வார்கடியான நம்பி கதாப்பாத்திரத்தில் ஜெயராம் நடிக்கவுள்ள செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்தி. அதோடு மட்டுமல்லாம், “ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா” என குறிப்பிட்டுள்ளார் கார்த்தி.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.