ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆனாலும், சந்திரபாபு நாயுடுவை காட்டிலும் அதிகமாக பேசப்படுபவராக மாறியிருக்கிறார் பவன் கல்யாண். போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றுள்ள பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள் குவிந்த வருகிறது.


டீ போட்டுக் கொடுத்தாரு:


ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நடிகர் ஆவார். தனக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள பவன் கல்யாண் கல்லூரி படிப்பை சென்னையிலே முடித்தார். இந்த நிலையில், அவரைப் பற்றி தெரியாத தகவல் ஒன்றை நடிகரும், கராத்தே மாஸ்டருமான ஹூசைனி பகிர்ந்துள்ளார்.


இதுதொடர்பாக ஹூசைனி பேசியதாவது, “ பவன் கல்யாண் என் மாணவர். எனக்கு டீ எல்லாம் போட்டு கொடுத்து, இங்க இருக்குற இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணுவார். அவர் பெயரு அப்போ கல்யாண்குமார். அவரு என்கிட்ட கரோத்தே கத்துக்க வந்தப்ப நான் கத்துக்கொடுக்குறதையே நிறுத்திட்டேன். நான் செக்யூரிட்டி ஏஜென்சிஸ் நடத்திட்டு இருந்தேன்.


சிரஞ்சீவி தம்பினு தெரியாது:


ஆனா, அவரு ஒரு மாசம் வாசல்லயே காத்துகிட்டு இருந்தாரு. அவரு நிக்குறதை பாத்து கருணைப்பட்டு நானே அவரை கூப்பிட்டு கத்துக்கொடுத்தேன். அவரு என்கிட்ட கத்துக்க ஆரம்பிச்சு 3 மாசத்துக்கு பிறகுதான் அவரு சிரஞ்சீவியோட சொந்த தம்பினு எனக்கு தெரிஞ்சது. அப்புறம் கத்துக்கிட்டு அவரு ப்ளாக் பெல்ட் வாங்கிட்டாரு. அப்புறம் பத்ரி படத்துல அதே மாதிரி காட்சிகள் எல்லாம் வந்துச்சு”


இவ்வாறு அவர் கூறினார்.


தமிழில் விஜய் நடிப்பில் உருவான பத்ரி படம் முதன்முதலில் தெலுங்கில் 2000ம் ஆண்டு உருவானதே ஆகும். தெலுங்கின் பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத் முதன்முதலில் இயக்கிய இந்த படத்தில் நடிகர் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படம் அங்கு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2001ம் ஆண்டு தமிழில் இந்த படம் விஜய் நடிப்பில் உருவானது. இந்த படத்தில் விஜய்யின் பயிற்சியாளராக ஹூசைனியே நடித்திருப்பார்.


தமிழில் விஜய் நடித்த குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணே நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: 36 years of Poonthotta Kaavalkaaran : நீ எங்கள் நெஞ்சத்தில்.. 175 நாட்கள் ஓடிய விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் ரிலீஸ்!


மேலும் படிக்க: Pawan Kalyan: நடிகன் - தலைவன்! ஜெகன்மோகனையே அலறவிட்ட பவர் ஸ்டார் - யார் இந்த பவன் கல்யாண்?