காவல்துறையில் இருந்த தன்னிடம் காட்டப்பட்ட பாகுபாடு காரணமாக அந்த பணியை ராஜினாமா செய்தேன் என நடிகர் கராத்தே கார்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், இரவுக்கு ஆயிரம் கண்கள், பிகில்,பேட்ட, கைதி, சங்கத்தலைவன், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கராத்தே கார்த்தி. இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். கராத்தே, பாக்ஸிங், ஜூடோ, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் என பல துறைகளிலும் சிறந்து விளங்கும் கராத்தே கார்த்தி கமல் நடித்த தசாவதாரம் படம் மூலம் தான் தன் நடிப்பு பயணத்தை தொடங்கினார். 


இந்நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில் தன் காவல்துறை பணியை வேலையை ராஜினாமா செய்ததை பற்றி பேசியுள்ளார். அதில், ”1991 ஆம் ஆண்டு ரஜினி நடித்த பாயும் புலி படம் பார்த்து தான் தற்காப்பு கலை மீது ஆர்வம் வந்தது. இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். 1995 முதல் பாக்ஸிங், 2001ல் ஜூடோ என பல விதமான தற்காற்பு கலைகள் கற்றுக்கொண்டேன். நான் போலீஸில் தான் இருந்தேன். 2000ல் மத்திய ரிசர்வ் போலீஸில் இந்திய அணியின் விளையாட்டு வீரராக இருந்தேன். அங்கு வந்து வடக்கு- தெற்கு பாகுபாடு என்பது இருந்தது. அதனால் எவ்வளவு தான் தோற்று கொண்டே இருப்பது என வந்து விட்டேன். 2006ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டேன். 


டாக்டர் படத்தில் அந்த நைட்டி போடுவதற்கு முந்தைய காட்சி எடுக்க 2 நாட்கள் தண்ணீரே குடிக்காமல் இருந்தேன். ஒரு நாளைக்கு இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என எடை போட்டு தான் சாப்பிடுவேன். ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்கள் டயட் ஃபாலோ பண்ணுவேன். டாக்டர் படத்தில் நெல்சன் என்னை நைட்டி போட எல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எல்லாம் எப்போவாது அமையும். இதைப் பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது. எங்கு சென்றாலும் என்னை கொண்டாடுகிறார்கள்” என கார்த்தி தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Varushangalkku Shesham Review: கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட மலையாள சினிமா.. வருஷங்களுக்கு சேஷம் படம் எப்படி இருக்கு?