நாள் - 25.08.2023 - வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 09.00 மணி முதல் காலை 10.00 மணி வரை


மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரப் பணிகளில் வேலை ஆட்களால் விரயங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.


ரிஷபம்


செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.


மிதுனம்


வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் விலகும். தெளிவு பிறக்கும் நாள்.


கடகம்


ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் பிறக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.


சிம்மம்


அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகனப் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.


கன்னி


சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.


துலாம்


மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கைகூடிவரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.


தனுசு


நண்பர்களின் வழியில் விரயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் மேம்படும். புதிய நபர்களின் கருத்துகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள். 


மகரம்


உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பரிசுகள் கிடைக்கும் நாள்.


கும்பம்


உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் திருப்தி உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


மீனம்


பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். உறவினர்களின் வழியில் மதிப்பு மேம்படும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உறுதி வேண்டிய நாள்.