நடிகர் கமல்ஹாசன், ஃபகத் பாசில் விஜய் சேதுபதி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பலதரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தடுமாறிக்கொண்டிருந்த கோலிவுட்டுக்கு புது நம்பிக்கை பாய்ச்சியது விக்ரம் திரைப்படம். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலில் பட்டையைக் கிளப்பியது. தமிழ்நாடு மட்டுமின்று, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் விக்ரம் நல்ல வசூல் செய்தது.





வசூலில் மகிழ்ச்சியடைந்த கமல் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கு, சிறப்புதோற்றத்தில் வந்த சூர்யாவுக்கு என அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். இப்படி நாயகன் மீண்டும் வரான் என்ற பாட்டுக்கு ஏற்றமாதிரியே கமல்ஹாசன் தன்னுடைய ரீ எண்ட்ரியை மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் கொடுத்துள்ளார். சினிமா ஒருபுறம் இருந்தாலும் தான் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தையும் கவனித்துகொண்டிருக்கிறார் கமல். 






அவ்வப்போது கட்சி மீட்டிங், நிர்வாகிகள் சந்திப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் கட்சி தொடர்பான மீட்டிங் ஒன்றில் பேசிய கமல் வெற்றிக்கான ஃபார்முலா இதுதான் என பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியைக் குறிப்பிட்டு இந்த கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேடையில் பேசிய கமல், ''தோனியைப் பற்றி சொல்வாங்க.. நீங்க எப்படி இவ்ளோ கூலா இருக்கீங்கன்னு.. அவரு விளையாட்டை பற்றி நினைப்பவர். வெற்றியை பற்றி நினைப்பவர் அல்ல. பிரம்மாதமா விளையாடனும்னு மட்டுமதான் அது. அப்படி நினைச்சா நமக்கு பிரஷர் வராது. செஞ்சுரி வரும். இன்னொன்னு இருக்கு.. எதிரி என்ன செய்கிறான் என்பதையே கவனித்திக்கொண்டிருந்தால் நாம தடுக்கி விழுந்துருவோம். எங்க சினிமாத்துறையிலேயே அதை பன்னுவாங்க. அந்த படம் எப்படி ஓடுதுனு யோசிக்கிறது விட்டுட்டு தான் என்ன செய்யனும்னு யோசிச்சாலே வெற்றி வரும். அரசியல் கட்சிக்கு இடமே இல்லை, இப்போபோய் கட்சி தொடங்குகிறீங்களேனு ஒருத்தர் கேட்டார். இடத்துக்காக நான் வர்லைங்க.. மாற்றத்துக்காக வந்திருக்கேன்'' என்றார். 


கமல்ஹாசனின் சக்சஸ் பார்முலா பேச்சுக்கு சினேகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்