கொச்சியில் தக் லைஃப் ப்ரமோஷன் 

நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது கேரளாவில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

நாம் அனைவருமே திராவிடர்கள் - கொச்சியில் கமல் 

கொச்சியில் பிவிஆர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த கமல் இப்படி பேசினார் " முதலில் நம் பக்கத்து மாநிலத்தில் இருக்கும் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் இந்தியை அப்புறம் பார்க்கலாம். நாம் அனைவருமே திராவிடர்கள். ஒரே குடும்பம். தமிழ் நாட்டில் மலையாளம் பேசினால் புரியும் ஆனால் ரொம்ப நேரம் பேசினால் புரியாது. ஆனால் கேரளாவில் தமிழ் பேசினார் எல்லாருக்கும் புரியும். என் மொழியை அழியாமல் நான் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகுதான் மற்ற மொழிக்கு முக்கியத்துவம். இதை சொல்வதற்கே ஒரு தனி தைரியம் வேண்டும். நான் எல்லாருமே திராவிடர்கள். அந்த பெருமையுடன் தக் லைஃப் படத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்"