ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகாலை முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் திரையரங்குகள் இன்று இயங்காது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரே தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் நகைக்கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.