கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக உள்ளார். ஒரு பக்கம் பிக்பாஸ், மறுபுறம் விக்ரம் ஷூட்டிங் என பரபரவென சென்றுகொண்டிருக்கிறார் கமல். கோடை விடுமுறையை கணக்கிட்டு விக்ரம் படம் வெளியாகும் என தெரிகிறது. இதனால் பட வேலைகள் பரபரவென நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே விக்ரம் ஷூட்டிங்குக்காக பெங்களூர் பறந்த கமல், கிடைத்த கேப்பில் புனித் ராஜ்குமார் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கமலின் நெருங்கிய நண்பரும், கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்தும் உடன் இருந்துள்ளார். 






கன்னடத் திரையுலகின் முதல் குடும்பம் நடிகர் ராஜ்குமாருடையது. கன்னடத்து நடிகர் திலகம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பர்வதம்மாவுக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகள் என அனைவருமே திரைப்பட நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் என ஏதோ ஒருவகையில் கன்னடத் திரையுலகுடன் தொடர்பில் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். இப்படியான குடும்பத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது.






 


2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார்.  புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். 'A Man with no haters' என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். புனித் இறந்து 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை அவரின் இறப்பை அவர் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து வருத்தமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் பல்வேறு தரப்பினரும் புனித் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண