கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கன்னட மொழி குறித்து கமலின் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகும் என கன்னட திரைப்பட மற்றும் வனிக சங்கம் தெரிவித்த நிலையில் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
மேலும் தக் லைஃப் படத்தை படத்தை வெளியிட அரசு மற்றும் காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக்கூடாது எனவும் திரையரங்குகளில் எந்தவித தடை இன்றி படம் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் , தனது படம் வெளியாகும் நாள் என்று திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கமலஹாசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
நீங்கள் என்ன மொழியியல் வல்லுநரா ?
"மொழி குறித்து பேச நீங்கள் என்ன மொழியியல் ஆய்வாளரா அல்லது வரலாற்று ஆய்வாளரா"? தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என நீங்கள் எப்படி கூற முடியும் ? இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா ? நீங்கள் வேண்டுமானால் கமல்ஹாசனாக இருக்கலாம் ஆனால் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் உரிமை உங்களுக்கு கிடையாது. ஒரு பிரபல நடிகர் இந்த மாதிரியான கருத்துக்களை பேசக் கூடாது. கோடிக்கணக்கான மக்களின் மனம் புண்படும் வகையில் நீங்கள் பேசி உள்ளீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். நீர் நிலம் மொழி மூன்றுமே குடிமக்களுக்கு மிக முக்கியமானதாகும். இப்படி மொழியை சிறுமைப்படுத்தி விட்டு வணிக நோக்கில் கமல் நீதிமன்றம் வந்துள்ளார்" என நீதிபதி நாக பிரசன்னா பேசினார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு 2:30 மணிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
பேச்சுவார்த்தை நடத்த முடிவு
நீதிபதி மற்றும் கமல் தரப்பு வழக்கறிஞர் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தை கேட்டால் இந்த பிரச்சனை முடிந்துவிடும் என நீதிபதி கூறினார். தான் எந்த விதத்திலும் கன்னட மொழிக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் பேசவில்லை என்பதால் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தாமதமானாலும் பரவாயில்லை கன்னட திரைப்பட மற்றும் வனிக சபையுடன் கலந்து பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கமல் முடிவெடுத்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து திரைப்பட சபையுடன் கலந்து பேசி கமல் ஒரு சமரசத்திற்கு வரும்படி நீதிமன்றம் உத்தவிட்டார்