ராயன்


தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கிறது ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா , அபர்னா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார்  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 


ராயன் குடும்பம்


பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ராயன். ராயன் படத்தின் கதை தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இப்படத்தைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய காளிதாஸ் ஜெயராம் “ இப்படத்தின் தனுஷ் மூத்த அண்ணனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷன் இரண்டாவது அண்ணனாகவும் நான் கடைசி தம்பியாக நடித்திருக்கிறேன். துஷாரா எங்கள் தங்கையாக நடித்திருக்கிறார். இது வடசென்னையை மையப்படுத்திய ஒரு கதை . இந்த மூவரின் தங்கைக்கு நடக்கும் ஒரு நிகழ்வை மையப் படுத்தி இந்த கதை அமைந்துள்ளது. தனுஷின் 50 ஆவது படத்தில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. ரொம்பவும் ரகடான ஒரு படமாக ராயன் படம் உருவாகியிருக்கிறது.” என்று காளிதாஸ் ஜெயராம் தெரிவித்துள்ளார். 


குபேரா


ராயன் படத்தைத் தொடந்து தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஹைதராபாத் , மும்பை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 






குபேராவுக்கு அடுத்தபடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.




மேலும் படிக்க : Kalki 2898 AD Collection: உலகளவில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கும் கல்கி! முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?


Kalki 2898 AD: வரலாற்று வில்லன்களை சூப்பர் ஹீரோக்களாக மாற்றிய கல்கி - எதிர்பாராத டிவிஸ்ட் ஏராளம்! அப்படி என்ன வொர்த்?