நடிகர் ரஜினிகாந்த சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் வியந்தேன் என நடிகர் காதல் சுகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

காதல் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் சுகுமார். கிட்டதட்ட 10 ஆண்டுகளாக ஸ்கிரீனில் வராதவர் சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் மூலம் மீண்டும் தனது நடிப்புக்கு பாராட்டைப் பெற்றிருக்கிறார். சினிமாவில் நடிக்காமல் இருந்த காலக்கட்டத்தில் இயக்குநராகவும் பணியாற்றினார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனக்கு ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை தவற விட்டதை பற்றி பேசியுள்ளார். 

அதில், “படையப்பா படத்துக்குப் பின் ரஜினி ஒரு 3 வருடம் படமே பண்ணவில்லை. அவர் பாபா படம் பண்ணும்போது நான் காதல் படம் செய்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்.

Continues below advertisement

அந்த படத்துக்காக என்னை அழைத்திருந்தார். அப்போது நான் டிவியில் பிரபலமாக இருந்தேன். அருணாச்சலம் ஹெஸ்ட் ஹவுஸில் சுரேஷ் கிருஷ்ணாவை சந்தித்தேன். 

மேலே போய் உட்காருங்கள் என சொன்னார். நான் யாரோ கதை சொல்லப்போகிறார் என்றால் ரஜினி தான் கதை சொன்னார். நான் கண்ணை சிமிட்டவே இல்லை. வாங்க சுகுமார் பாபா படத்தில் நீங்கள் ஒரு கேரக்டர் பண்றீங்க. செந்தில் சார் உங்கள் குரு, நீங்கள் அவரது சிஷ்யன். இருவரும் இமயமலையில் இருந்து வந்ததாக என்னை ஏமாற்றுவீர்கள். எனக்கு கடவுள் பக்தியே இருக்காது என ஒரு 20 நிமிடம் கதை சொன்னார். 

என்னிடம் ஓகே வா என கேட்டார். நான் எங்க கதையை கேட்டேன். அவரைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்தபிறகு ரஜினியிடம், ‘சார் என்னையெல்லாம் எப்படி இந்த கேரக்டரில் நடிக்க வைக்கலாம்? என நினைத்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நான் உங்களை டிவியில் எல்லாம் பார்த்திருக்கேன். வடிவேலு மாதிரி பண்ணுவீங்களே’ என சொன்னார். 

அதெல்லாம் எப்ப சார் பார்த்தீங்க என கேட்டதும், நான் 3 வருஷம் சும்மா தானே இருந்தேன் என ரஜினி சொன்னார். பாபா படத்தை இப்போது கவனித்தாலும் அதில் பாதி பேர் டிவியில் நடித்தவர்களாகத்தான் இருப்பார்கள். எல்லா நடிகர்களையும் ரஜினி தான் தேர்வு செய்தார். ஜூனியர் என்.டி.ஆர் படம் தெலுங்கில் கமிட்டானதால் என்னால் பாபா படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. கவுண்டமணி எல்லாம் சினிமாவில் 3 முறை ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இங்கு தேக்கநிலை என்பது இருக்கும். அந்த  மாதிரியான விஷயம் எல்லாருக்கும் நடக்கும்” என காதல் சுகுமார் கூறியுள்ளார்.