ஜோஜூ ஜார்ஜ் 

 தயாரிப்பாளர் , நடிகர் , இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜோஜூ ஜார்ஜ்.  ஹீரோ, வில்லன், காமெடி என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் தன்னை கச்சிதமாக பொருத்தி நடிக்கக்கூடிய திறனுள்ளவர்.  ஜோசப் , நயட்டு  , சோழா , இரட்டா  போன்ற பல சிறப்பான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய பனி திரைப்படம் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான ரெட்ரோ மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தான் பார்த்து பொறாமை படும் ஒரு நடிகர் என ஜோஜூ ஜார்ஜ் பற்றி  உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஏமாற்றப்பட்ட ஜோஜூ ஜார்ஜ் 

ஜோஜூ ஜார்ஜ் நடித்து 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் சுருளி படம் வெளியாகியது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் அதிர்ச்சிகரமான தகவல் சிலவற்றை பகிர்ந்துள்ளார் " சுருளி படத்தில் நடித்ததற்கு நான் சம்பளமே வாங்கவில்லை. இந்த படத்தில் நான் கெட்ட வார்த்தை பேசும் காட்சி இருந்தது. இதுகுறித்து கேட்டபோது அந்த காட்சிகளை திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடுவோம் என்று இயக்குநர் கூறினார். ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த காட்சிகளை திரையரங்கில் வெளியிட்டார்கள். அதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை" என ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.