Jiiva : திருச்செந்தூர் சுப்ரமணியசாமி தரிசனம் செய்த நடிகர் ஜீவா..பிளாக் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி

தான் நடித்த பிளாக் படம் வெற்றிபெற்றதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் நடிகர் ஜீவா

Continues below advertisement

ஜீவா

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுத்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா. திரைத்துறையில் பெரிய குடும்ப பிண்ணனி இருந்தாலும் தான் நடித்த படங்களாலும் தனது நடிப்பாலும் ஒரு சிறந்த நடிகர் என்கிற பெயர்பெற்றவர் ஜீவா. தமிழில் தித்திக்குதே படத்தின் வழியாக நாயகனாக அறிமுகமான ஜீவா ஒரே டிராக்கில் செல்லாமல் தனது நடிப்பு திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார்.  ஒரு பக்கம் கற்றது தமிழ் , ராம் , ஈ , உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் சிங்கம் புலி , சிவா மனசுல சக்தி , போன்ற கமர்ஷியல் ரீதியாக வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஜீவா நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி காணவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் சமீபத்தில் வெளியான பிளாக் திரைப்படம் அவருக்கு அந்த வெற்றியைக் கொடுத்துள்ளது.

Continues below advertisement

திருச்செந்தூர் சாமி தரிசனம் செய்தார் ஜீவா

நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படம் பிளாக் . கே.ஜி பாலசுப்ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷா ரா, ஸ்வயம் சித்தர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. பெரியளவில் ப்ரோமோஷன் ஏதும் இல்லாமல் வெளியான ப்ளாக் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு ரசிகர்களின் வரத்தும் அதிகரித்து படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.

பிளாக் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நேற்று அக்டோபர் 29 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். சுப்ரமணிய சுவாமி தரிசம் செய்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் " என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் நான் இங்கு வருவேன். ராம் , கோ படத்திற்கு நான் வந்திருந்தேன். பிளாக் படத்தின் வெற்றிக்காக இப்போது வந்திருக்கிறேன். உண்மையாகவே ரொம்ப சந்தோஷம். இங்கு இருக்கு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமோக தரிசனம் செய்தோம் . மன நிறைவோடு திரும்பி செல்கிறோம்" என ஜீவா தெரிவித்துள்ளார்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola