Diwali 2024 Gifting Ideas: பரிசு வழங்கி உங்களுக்கு நெருக்கமானவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு தீபாவளி ஒரு சிறந்த நாளாகும். 


தீபாவளி பரிசு ஐடியாக்கள்:


தீபாவளி நெருங்கி வந்துவிட்டது. இது நெருக்கமானவர்களுக்கு பரிசளிப்பதற்கு சரியான காலம் ஆகும். இதற்கான சரியான பரிசைக் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கலாம். அதிநவீன ஃபிட்னஸ் தொழில்நுட்பம் முதல் ஸ்டைலான போர்ட்டபிள்  ஸ்பீக்கர்கள் வரை , இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக வழங்க உங்கள் முன் உள்ள சில பிரீமியம் ஆப்ஷன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கேட்ஜெட் பரிசுகள்


1. ஃபிட்ர் ஹார்ட் ஸ்மார்ட் ஃபிட்னஸ் டிராக்கர் ரிங் 


விலை: ரூ 15,999


ஃபிட்ர் ஹார்ட்  ஸ்மார்ட் ரிங் என்பது தூக்கம், மன அழுத்தம், இதய துடிப்பு மாறுபாடு (HRV) மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் (SpO2) பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் நேர்த்தியான ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு மோதிரம் ஆகும். தோல் வெப்பநிலை கண்காணிப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ரிகவரி ஸ்கோர்ஸ் போன்ற அம்சங்களுடன், இந்த மோதிரம் பயனர்கள் தங்கள் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கிறது. இது அனைவருக்கும் சரியான பொருத்தத்தை உறுதி செய்கிறது.



2. Garmin Venu Sq 2


விலை: ரூ 27,990



Garmin's Venu Sq 2 என்பது இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் ஆற்றல் நிலை மதிப்பீடுகள் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் நிரம்பிய பல்துறை ஃபிட்னஸ் வாட்ச் ஆகும். இதில் மன அழுத்தம் கண்காணிப்பு, பல்ஸ் ஆக்ஸிஜன் சென்சார்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு ஆகியவையும் மேற்கொள்ளப்படும். 25 க்கும் மேற்பட்ட இந்பில்ட் விளையாட்டு பயன்பாடுகள் மற்றும் தனிப்பயன் உடற்பயிற்சிகளுடன், உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் ஒரு சிறந்த கருவியாகும்.


3. BlendJet 2 போர்ட்டபிள் பிளெண்டர்


விலை: ரூ 2,999



எப்போதும் பயணத்தில் இருப்பவர்களுக்கு, BlendJet 2 என்பது ஸ்மூத்திகள், டிப்ஸ் (dips) மற்றும் பலவற்றைச் செய்வதற்கு ஏற்ற சிறிய, ரிச்சார்ஜபிள் பிளெண்டர் ஆகும். நீர்-எதிர்ப்பு வடிவமைப்பு மற்றும் USB-C சார்ஜிங் மூலம், இந்த சிறிய பிளெண்டர் எங்கும் எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் எளிதானது. பல வண்ணங்களில் கிடைக்கும், விரைவான, ஆரோக்கியமான பானங்களை விரும்புவோருக்கு இது ஒரு நடைமுறைக்கு சாத்தியமான பொருளாகும்.


4. மார்ஷல் எம்பர்டன் II


விலை: ரூ 12,998



இசை ஆர்வலர்களுக்கு, மார்ஷலின் எம்பர்டன் II புளூடூத் ஸ்பீக்கர், சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்புடன் சக்திவாய்ந்த 360 டிகிரி ஒலியை வழங்குகிறது.  இது 50 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. IP67 தூசி மற்றும் நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது, வீடுகளில் மட்டுமின்றி வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது. ஸ்பீக்கர் 30+ மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது மற்றும் மல்டி ஸ்பீக்கர் இணைப்பிற்கான "ஸ்டாக் பயன்முறை"யையும் கொண்டுள்ளது.


Amkette EvoFox டெக்


விலை: ரூ 2,799



மொபைல் கேமிங் ஆர்வலர்களுக்கு EvoFox டெக் சரியான பரிசு. புளூடூத் 5.0 மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கான சப்போர்ட்டுடன், இந்த கன்ட்ரோலர் தடையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இது தனிப்பயனாக்கக்கூடிய கீ மேப்பிங், பிரீமியம் பேக்லிட் பொத்தான்கள் மற்றும் எட்டு மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


இந்த பிரீமியம் கேஜெட்களை பரிசுகளாக்குவதன் மூலம், உங்களுக்கு நெருக்கமானவர்களை இந்த  உங்கள் தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியுற செய்யுங்கள்>