நயன்தாரா அறிக்கை
மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தலைப்பு செய்தியில் இடம்பெற்று விடுகிறார் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்து அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா. தற்போது லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா வெளியிட்ட அறிக்கை
"எனது வாழ்க்கை எப்போதும் உங்கள் நிபந்தனையற்ற அன்பு மற்றும் பாசத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது வெற்றியின் போது என் தோளில் தட்டப்பட்டாலும் சரி, அல்லது துன்பங்களின் போது என்னைத் தூக்கிச் செல்ல உங்கள் கையை நீட்டியாலும் சரி, நீங்கள் எப்போதும் எனக்காக இருந்திருக்கிறீர்கள். உங்களில் பலர் என்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அன்புடன் குறிப்பிட்டுள்ளீர்கள், இது உங்கள் அபரிமிதமான பாசத்திலிருந்து பிறந்த ஒரு பட்டம். இவ்வளவு மதிப்புமிக்க பட்டத்தால் எனக்கு முடிசூட்டப்பட்டதற்கு நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும், நீங்கள் அனைவரும் என்னை "நயன்தாரா" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், அந்தப் பெயர் என் இதயத்திற்கு மிக நெருக்கமானது என்று நான் உணர்கிறேன். இது ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் நான் யார் என்பதைக் குறிக்கிறது. பட்டங்களும் பாராட்டுகளும் விலைமதிப்பற்றவை, ஆனால் அவை சில சமயங்களில் நமது படைப்புகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பார்வையாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் நிபந்தனையற்ற பிணைப்பிலிருந்து நம்மைப் பிரிக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடும். எல்லா வரம்புகளையும் தாண்டி நம்மை இணைக்கும் அன்பின் மொழியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம் என்று நான் நம்புகிறேன். எதிர்காலம் நம் அனைவருக்கும் கணிக்க முடியாததாக இருக்கலாம், உங்கள் மங்காத ஆதரவும், உங்களை மகிழ்விக்க எனது கடின உழைப்பும் நிலைத்திருக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சினிமாதான் நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது, அதை ஒன்றாகக் கொண்டாடுவோம். அன்பு, மரியாதை மற்றும் நன்றியுடன், நயன்தாரா" என தனது அறிக்கையில் நயன்தாரா தெரிவித்துள்ளார்
நயன்தாராவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
அன்மை காலங்களில் நடிகை நயன்தாரா மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் அனைத்து தருனங்களையும் இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்து வருவதால் ரசிகர்கள் ஒருவிதமான சலிப்பை எட்டியுள்ளார்கள். தற்போது நயன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அவர் கவனமீர்க்க செய்யும் செயல் என்றே பலர் கருதுகிறார்கள். நயன்தாராவை ட்ரோல் செய்து பல மீம்கள் பரப்பப் படுகின்றன.
நயன்தாராவை வெளுத்த ஜீவா
அந்த வகையில் நயன்தாரா நடித்த ஈ படத்தின் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியில் நடிகர் ஜீவா நயனை கட்டை எடுத்து வெளுத்து வாங்குகிறார்.