அடுத்த ஆண்டு ஆஸ்கரில் இணையும் புதிய விருது...என்ன தெரியுமா ?

இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சு சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் புதிய விருது ஒன்று இணைக்கப்பட இருக்கிறது

Continues below advertisement

ஆஸ்கர் 2025

திரைத்துறை கலைஞர்களுக்கு  உச்சபட்ச அங்கீகாரமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.  2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விருதில் சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் பிராடி வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை அனோரா படத்திற்காக மைகி மேடிஸன் வென்றார். அதிகபட்சமாக அனோரா படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை முதல் முறையாக கருப்பின அமெரிக்கர் பால் டேஸ்வெல் வென்றார். சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதினை ஃப்லோ திரைப்படம் வென்றது . இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு ஒரு சில படங்கள் தேர்வானாலும் இறுதி பட்டியல் வருவதற்குள் அவை போட்டியில் இருந்து நீக்கப்பட்டன. 

Continues below advertisement

ஆஸ்கரில் இணையும் புதிய விருது

இந்த ஆண்டு ஆஸ்கரில் கலந்துகொண்ட  நட்சத்திரங்களிடம் பொதுவாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது ஆஸ்கர் விருதிற்கான பிரிவுகளில் புதிதாக எந்த பிரிவை சேர்க்க வேண்டும் என கேட்கப்பட்டது . சிறந்த ஸ்டண்ட் காட்சிகள் , சிறந்த நடிகர்கள் தேர்வு  ஆகிய இரு பதில்கள் பெரும்பாலானவர்கள் கொடுத்த பதிலாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்கரில் புதிய் விருதுக்கான பிரிவு ஒன்றை இணைக்கப்படுவதாக பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்கரில் சிறந்த நடிகர்கள் தேர்வுக்கான விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதையும் படிங்க : Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ

சிறந்த நடிகர்கள் தேர்வுக்கான ஆஸ்கர் 

ஒரு படத்தின் கதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் கதைக்கு பொருந்தாத நடிகர்களை நடிக்க வைத்தால் மொத்த படமும் சொதப்பிவிடும். ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கத் தேவையான அத்தனை நடிகர்களையும் காஸ்டிங் இயக்குநர் தனது குழுவோடு பேசி தேர்வு செய்வார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர்களை தேர்வு செய்த காஸ்டிங் இயக்குநரை அங்கீகரிக்க இந்த விருது பிரிவு அறிமுகபடுத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த பிரிவின் கீழ் முதல் விருதை யார் வாங்கப் போகிறார் என்பதே தற்போது அனைவரது கேள்வியாக இருக்கிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola